Header Ads



இணையத் தாக்குதல் நடத்திய மாணவனை, மன்னிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

தன்னை கொல்ல வந்தவர்களை மன்னித்த ஜனாதிபதி அவரது இணையத்தில் தாக்குதல் நடத்திய சிறுவன் தொடர்பிலும் நல்ல முடிவினை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுவனை தண்டிக்காமல் அவனது திறமைகளை வேறு மார்க்கங்களில் பிரயோசனப்படுத்துவது தொடர்பில் சிந்திக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபாலவை கொலை செய்ய வந்த நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சீகிரிய ஓவியத்துக்கு சேதத்தை விளைவித்த யுவதிக்கு வழங்கப்பட்ட மன்னிப்பையும் நினைவுப்படுத்தியுள்ளார்.

எனவே, ஜனாதிபதியின் இணையத்தில் தாக்குதலை மேற்கொண்ட பாடசாலை மாணவனுக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இணையம் தொடர்பாக ஜனாதிபதியை தெளிவுப்படுத்தும் நோக்குடனே ஜனாதிபதியின் இணையம் மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகநபரான 17 வயது மாணவன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. இவர்கள் குழுக்கள் தான் செய்தது விரிவான விசாரணை செய்தால் நாம் மாட்டிக்கொள்வோம் என்ற பீதீயில் உளருகிறான,நாட்டின் துரோகிகள்

    ReplyDelete

Powered by Blogger.