Header Ads



ஷக்கீப் படுகொலை, வெவ்வேறு கோணங்களில் விசாரணை - குற்றவாளிகள் இதுவரை சிக்கவில்லை

கொழும்பு பம்பலப்பிட்டி பகுதியில் வர்த்தகர் ஒருவர் கொலை செய்யப்பட்டமையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத் தடுப்புபிரிவினரும், பம்பலப்பிட்டி பொலிஸாரும் வெவ்வேறு கோணங்களில் இந்த விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று கொழும்பு நகரில் பதிவாகிய சி.சி.ரி.வி காணொளிகளையும் பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.

இதேவேளை இந்த கொலையுடன் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் ஐந்து பேர் வௌிநாடு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி இரவு கோடீஸ்வர வர்த்தகரான மொஹமட் ஷக்கீப் சுலைமான் பம்பலப்பிட்டி கொத்தலாவலை வீதியிலுள்ள அவரது வீட்டிற்கு முன்பிருந்து கடத்திச் செல்லப்பட்டார்.

இதனை அடுத்து கடந்த 24 ஆம் திகதி மொஹமட் ஷக்கீப் சுலைமான் உருகுலைந்த சடலம் மீட்கப்பட்டது.

நிதி மோசடி தொடர்பில் மேலும் சில வர்த்தகர்களுக்கு எதிராக மொஹமட் ஷக்கீப் சுலைமான் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவு ஆகியவற்றில் முறைப்பாடு செய்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

1 comment:

  1. Why can't they put the blame on Rajapaksa family and arrest Namal and remand?

    ReplyDelete

Powered by Blogger.