கினியா முஸ்லிம்களுக்கு ஹஜ்ஜுக்கு தடை
எபோலா நோய்த் தொற்று பரவும் அச்சம் நிலவி வரும் நிலையில், கினியா நாட்டவர்களுக்கு புனித ஹஜ் யாத்திரைக்காக மக்கா செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்லாமியர்களின் புனித ஹஜ் யாத்திரையை மேற்கொள்வதற்காக வருடாவருடம் லட்சக்கணக்கான யாத்திரிகர்கள் சவுதி அரேபியாவின் மக்கா மற்றும் மதீனா நகருக்குச் சென்று வருகின்றனர். இதற்காக ஒவ்வாரு நாட்டில் இருந்து குறிப்பிட்ட தொகையினருக்கு சவுதி செல்ல விசா வழங்கப்படும்.
இந்நிலையில் இம்முறை ஹஜ் யாத்திரைக்காக மக்கா செல்ல கினியாவில் இருந்து 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதிவு செய்திருந்தனர். எனினும், எபோலா நோய் பரவும் அச்சத்தை தொடர்ந்து, அவர்கள் சவுதி அரேபியாவிற்கு செல்வதற்கு இரண்டு வருடங்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த புனித பயணத்திற்காக, அம்மக்கள் கிட்டத்தட்ட தலா 5,000 டொலர்களை செலுத்தியிருந்தார்கள். இந்நிலையில், தமக்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தடையால் தாம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
Post a Comment