இலங்கையில் அமெரிக்க போர் விமானம் - திருகோணமலையிலிருந்து பறந்துசெல்ல அடம்பிடிப்பு
அமெரிக்க போர் விமானம் ஒன்றிக்கு திருகோணமலை சீனன் குடா விமான நிலையத்தை பயன்படுத்த இடமளிக்குமாறு அமெரிக்க அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமெரிக்க போர் விமானம் தற்போது இலங்கை வந்துள்ளதுடன் இந்தியா நோக்கி புறப்பட்டுச் செல்ல உள்ளது. விமானம் தற்போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்ல முடியும் என்ற போதிலும் சீனன் குடா விமான நிலையத்திற்கு அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்லும் தேவை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமெரிக்க விமானம் எதற்காக வந்தது, அதில் பயணிப்பவர்கள் யார் என்பது பற்றிய தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
அமெரிக்க விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேரடியாக இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் செல்ல முடியும் எனினும் சீனன் குடா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டு அங்கிருந்து இந்தியாவுக்கு புறப்பட்டுச் செல்வது தொடர்பில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
குறித்த விமானம் சீனன்குடா விமான நிலையத்தில் தரையிறங்குவதனை எதிர்க்கவில்லை எனக் கூறி, சிவில் விமான சேவைகள் பணிப்பாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் விமான நிலையத்தை பயன்படுத்த அனுமதி கோரியுள்ளார்.
அமெரிக்க விமானத்தின் விமானி உட்பட அதில் பயணிப்பவர்களுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு சேவைகளை வழங்கும் பொறுப்பு இலங்கை விமானப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விமானம் சீனன் குடா விமான நிலையத்தில் இருந்து இந்தியாவை நோக்கி புறப்பட்டுச் செல்வது தொடர்பான திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும், சிவில் விமான சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அமைச்சிடம் கேட்டுள்ளது.
இதற்கு முன்னர் அமெரிக்காவின் டி.130 என்ற விமானம் மருந்து தொகையுடன் பலாலி விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து திரும்பிச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment