அம்பாறையில் நாளை றிசாத்
-அபூ அஸ்ஜத் -
அம்பாறை மாவட்டத்தில் மிகவும் மக்களினால் அவதானிக்கப்பட்டுவரும் விடயத்தில் முக்கியமானதாக ஒலுவில் கடலறிப்புக்கு எடுக்கப்பட்டுவரும் துரித தீர்வு தொடர்பிலாகும்.
தற்போது அப்பிரதேசத்தின் கடலறிப்பினால் ஏற்பட்டுள்ள அச்ச சூழ் நிலையினை தவிர்க்கும் வகையில் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்பதில் அரசியல் தலைமைகள் முரண்பட்ட கருத்துக்களை கொண்டிருந்த போதும்,இந்த பிரச்சினைக்கு முடிவு கட்ட வேண்டும் என்பதில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் ஆரம்பித்த முயற்சிக்கு அரசாங்கத்தின் சாதகமான பதிலை இன்று அமைச்சரவை வெளியிட்டுள்ளது.
அமைச்சர் றிசாத் பதியுதீன் துறைமுகங்கள் கப்பல் துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவை பல முறை சந்தித்தும்,எழத்து மூலமான முயற்சிகள் மூலமும்,ஒலுவில் கடலறிப்பு தொடர்பில் கவனத்தை ஈர்க்கச் செய்தார்.அதே போல் துறைமுக அதிகார சபை தலைவர் மற்றும் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் தொடர் பேச்சு வார்த்தைகளை நடத்தியும்,ஒலுவில் பிரதேசத்திற்கு அந்த அதிகாரி சென்று பார்வையிடுவதற்கும் அமைச்சர் றிசாத் பதியுதீன் எடுத்த நடவடிக்கைகள் இன்று சான்றாக உள்ளது.
இவ்வாறான நிலையில் இந்த கடலறிபை நிரந்தரமாக தடுக்க நீண்ட கால திட்டம் ஒன்றின் அவசியம் தொடர்பிலும் ஜனாதிபதியிடத்திலும்,பிரதமர் இடத்திலும் அடிக்கடி சுட்டடிக்காட்டி அமைச்சரவைக்கு பத்திரம் ஒன்றினை கொண்டுவருவதற்கு கால்கோளாக அமைந்தவர் றிசாத் பதீயுதீன் என்றால் அது மிகையாகாது.
அதனடிப்பமைடயில் செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற அமைச்சரவையின் போது அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன்,தற்காலிகமாக இந்த கடலறிப்பினை தடுக்கும் வகையில் கற்களை கொண்டு அணையிடும் பணி இடம் பெறவுள்ளது.
இந்த நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் இப்பிரதேசத்திறகு நாளை வியாழக்கிழமை(2016.09.01) அம்பாறை மாவட்டத்திற்கு வருகைத்தரவுள்ளார்.
இதன் போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்வுள்ளதுடன்,எதிர் கால செயற்பாடுகள் தொடர்பில் மக்களை அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தினையும் ஆரம்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment