சவூதி அரேபிய மன்னர் சல்மானுடன், ஜனாதிபதி மைத்திரி தொலைபேசி உரையாடல்
இலங்கைக்கு மேலதிகமாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்வது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை சவூதி அரேபிய மன்னருடன் தொலைபேசியூடாக நேரில் உரையாடவுள்ளார்.
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம் தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று லண்டனுக்குப் பயணமானார்.
அவர் லண்டனுக்குப் பயணமாவதற்கு முன்பு இலங்கைக்கு மேலதிகமாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்கும் பொறுப்பு இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸியிடம் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் கையளிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு மேலதிகமாக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்வது தொடர்பாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தினார்.
இதனையடுத்தே இன்று ஜனாதிபதி சவூதி மன்னருடன் மேலதிக ஹஜ் கோட்டா தொடர்பில் தொலைபேசியூடாக கலந்துரையாடவுள்ளார்.
இலங்கைக்கு மேலதிகமாக ஹஜ் கோட்டா வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சவூதி ஹஜ் அமைச்சரிடம் கடித மூலம் கோரிக்கையொன்றினை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால், தபால் சேவைகள் அமைச்சரும் மேலதிக கோட்டா வழங்குமாறு சவூதி ஹஜ் அமைச்சரைக் கோரியிருந்தார்.
கடந்த வருடம் இலங்கைக்கு 600 மேலதிக கோட்டா வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பெளஸியைத் தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது;
‘கடந்த கால ஹஜ் ஏற்பாடுகளுக்கான தலைவராக கடமையாற்றிய அனுபவங்களைக் கொண்டு இவ்வருடமும் மேலதிக ஹஜ் கோட்டா பெற்றுக் கொள்வது தொடர்பிலான ஏற்பாடுகளை ஜனாதிபதியுடன் இணைந்து மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.
மேலதிக கோட்டா கிடைக்கும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார்.
விடிவெள்ளி ARA.Fareel
விடிவெள்ளி ARA.Fareel
Post a Comment