ஹெலிகொப்டருடன் தரையிறங்கிய சஜித், கூறும் விளக்கம்
அமைச்சர்களான நவீன் திசாநாயக்க மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோருடன் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றுக்கு அமைச்சர் சஜித் பிரேமதாச சென்ற போது நுவரெலியாவில் காலநிலை சீர்கேட்டினால் இவர்கள் சென்ற ஹெலிகொப்டர் மரக்கறி தோட்டம் ஒன்றில் நேற்றைய தினம் தரையிறக்கப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் சஜித், இந்த சம்பவத்தின் ஊடாக நல்லாட்சியின் நடவடிக்கைகளை பொதுமக்கள் புரிந்துக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.
அமைச்சர்களான தாங்கள் ஏன் தனியாருக்கு சொந்தமான ஹெலிகொப்டரில் பயணித்ததாக அனைவரும் தம்மிடம் கேட்பதாக தெரிவித்த அமைச்சர், நல்லாட்சியின் நடவடிக்கைகளுக்கு அமைய அரச ஹெலிகொப்டர்களில் பயணிப்பதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தான் இவ்வாறான ஹெலிகொப்டர்களில் பயணிக்கும் போது அமைச்சர் தயா கமகே ஒரு எஞ்சினைக் கொண்ட விமானத்தில் பயணிக்க வேண்டாம் என்றும், இவ்வாறு பயணிக்கும் போது விபத்துக்கள் ஏற்படலாம்.
எனவே வாழ்க்கையோடு விளையாடுகிறீர்களா? என எச்சரித்ததாகவும், அமைச்சர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.
தான் பெல் வர்க்க ஹெலிகொப்டரில் பயணித்து விட்டு அதற்கான நிதியினை வீடமைப்பு அமைச்சில் இருந்து பெற்றுக்கொடுக்குமாறு தனது அமைச்சின் செயலாளருக்கு கூறமுடியும்.
நுவரெலியாவிற்கு வருவதற்கு அரசின் ஹெலிகொப்டரை பயன்படுத்துவதற்கு பணம் செலுத்துவதாயின் வீடமைப்பு அமைச்சுக்கு கிடைக்காத இலாபத்துக்கு அதிகமான நிதியினை இதற்காக இழக்க வேண்டிவரும் என்றும், இதுவே நல்லாட்சி அமைச்சர்களின் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார்.
Post a Comment