முஸ்லிம்களை மஹிந்த தலைமையிலான, பொது எதிரணியில் ஒன்றுசேருமாறு அழைப்பு
முஸ்லிம்கள் தங்களது பொருளாதாரத்தை ஸ்தீரப்படுத்திக் கொண்டு இந்நாட்டில் பாதுகாப்பாக வாழ்வதற்கு இணைந்த எதிர்க்கட்சியுடன் கைகோர்க்க வேண்டுமென இணைந்த எதிர்க்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதம் தலைதூக்கியுள்ளமை தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
நல்லாட்சி என்று கூறிக்கொள்ளும் தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் இனவாதம் மேலோங்கி வருகிறது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு உத்தரவாதமிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பயங்கரவதத்திலிருந்தும் முஸ்லிம் மக்கள் பாதுகாக்கப்பட்டனர்.
புலிப் பயங்கரவாதத்தை அழித்ததன் மூலம் முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கிடைத்தது. இன்று முஸ்லிம்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. அரசாங்கம் விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கே நிவாரணங்களையும் பல்வேறு சலுகைளையும் வழங்கி வருகிறது.
ஜனநாயகம் இல்லாமற் செய்யப்பட்டுள்ளது. மக்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. உள்ளூராட்சி தேர்தலை நடத்தாது அரசாங்கம் வேண்டுமென்றே கால தாமதம் செய்து வருகிறது.
ஜனநாயகத்தை கட்டியெழுப்புவதற்கும் முஸ்லிம்கள் தமது பொருளாதாரத்தில் ஸ்தீரத்தன்மையடைவதற்கும் முஸ்லிம்கள் இணைந்த எதிர்க்கட்சியின் பக்கம் ஒன்றிணைய வேண்டும்.
புலிகளை ஆதரிக்கும் இந்த அரசாங்கத்தினால் ஒருபோதும் முஸ்லிம்களின் பாதுகாப்பினை உறுதிசெய்ய முடியாது. இணைந்த எதிர்க்கட்சியினாலேயே முஸ்லிம்கள் இந்நாட்டில் பீதியின்றி வாழ்வதற்கு உறுதி வழங்க முடியும்.
காணாமல்போனோர் அலுவலகம் என்ற பெயரில் நீதிமன்ற நடவடிக்கைகளே மேற்கொள்ளப்படவுள்ளன.
விசாரணைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்படவுள்ளனர்.
இதனால் இராணுவ வீரர்கள் தண்டிக்கப்படவுள்ளார்கள். இதனால் காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதற்கு இணைந்த எதிர்க்கட்சி எதிர்ப்பினைத் தெரிவிக்கிறது என்றார்.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகுமாம் பழமொழி இந்த லூசுகளின் கதைகளை கேட்டால் வெயிறு வலிக்க வலிக்க சிரிக்க வேண்டியுள்ளது
ReplyDeleteAll ready aswar, sattar available I think this enough
ReplyDeleteThis guy is a serious crack. Expired
ReplyDelete