உலகின் மிக உயர, நீளமான கண்ணாடி பாலம் திறப்பு
சீனாவின் ஹூனன் மாகாணத்தில் உலகின் மிக உயரமான, நீளமான கண்ணாடி பாலம் நேற்று(சனிக்கிழமை) திறக்கப்பட்டுள்ளது.
சுமார் 1,410 அடி(430 மீட்டர்) நீளத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. ஹூனன் மாகாணத்தில் உள்ள ஜங்ஜியஜியி கேன்யான் என்ற பகுதியில் தரையில் இருந்து 300 அடி உயரத்தில் இந்த பாலம் உள்ளது.
இந்த பாலம் தியான்மென் மலையின் தேசிய பூங்காவில் உள்ள இரண்டு குன்றுகளுக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ளது.
3.4 மில்லியன் டாலர் செலவில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது. 6 மீட்டர் அகலத்தில் பாலத்தின் நடுவே பாதை உள்ளது. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த ஹாய்ம் டோடன் என்ற வடிவமைப்பாளர் இதனை வடிவமைத்துள்ளார்.
இந்த பாலத்தை கண்டுகளிக்க தினந்தோறும் 8 ஆயிரம் பார்வையாளர்கள் தினமும் அனுமதிக்கப்படுவார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூன் மாதத்தில் இந்த கண்ணாடி பாலத்தில் பல்வேறு பாதுகாப்பு சோதனை செய்யப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
Post a Comment