Header Ads



இராஜாங்க அமைச்சர், பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு

நிபுணத்துவ அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார, பிரதான பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

பொலிஸ் சேவையில் இருந்த போது அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளாக்கப்பட்டதுடன் அரசியல் காரணங்களுக்காக பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கியவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட குழுவிடம் செய்த மேன்முறையீட்டை ஆராய்ந்த குழுவின் பரிந்துரைக்கு அமைய ரங்கே பண்டார, பிரதான பொலிஸ் பரிசோதகர் தரத்திற்கு உயர்த்தப்பட்டுள்ளார்.

தனக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் பதவியை வழங்கி, தனக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட போலி வழக்குகளுக்கு செலவான 18 லட்சம் ரூபாவை திரும்ப பெற்றுத்தருமாறு ரங்கே பண்டார, குழுவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதியில் இருந்து மீண்டும் பொலிஸ் சேவையில், நியமிக்கப்பட்டு, 2000 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு வழங்கப்பட்டு, அன்றில் இருந்து ஓய்வுபெற்றதாக கருதுமாறு மேற்படி குழு பரிந்துரைத்திருந்ததுடன் பதவி உயர்வுக்கான எந்த கொடுப்பனவுகளையும் வழங்க வேண்டாம் எனவும் கூறியுள்ளது.

ரங்கே பண்டார பொலிஸ் சேவையில் இருந்த போது இறுதியாக வெல்லவ பொலிஸ் நி்லைய பொறுப்பதிகாரியாக பணியாற்றினார்.

சேவையில் இருந்து விலகிய அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆணமடுவ அமைப்பாளராக அரசியலில் பிரவேசித்தார்.

ரங்கே பண்டாரவின் மேன்முறையீடு உட்பட பெருந்தொகையான மேன்முறையீடுகளை ஆராந்த குழு, அதில் 129 மேன்முறையீடுகளுக்கு பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. இதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்த பின்னர், அது பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

No comments

Powered by Blogger.