Header Ads



நாமல் ராஜபக்ஷவுக்கு, நீதிபதியின் எச்சரிக்கை

பண தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பலத்த எச்சரிக்கையின் மத்தியில் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

தவறான முறையில் பெற்றுக் கொண்ட 45 மில்லியன் பணத்தை தனது இரண்டு நிறுவனத்தின் ஊடாக பணம் தூய்மையாக்கல் செய்த சம்பவம் தொடர்பில் நாமல் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நேற்றையதினம் கொழும்பு நீதிமன்றில் நாமலை ஆஜர்படுத்திய வேளை, பிணையில் விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவு வழங்கியிருந்தார்.

இதன்போது நீதிமன்ற உத்தரவை மீறினால் நாமலின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் விடயங்கள் குறித்த ஆராயப்பட்டது. இதனடிப்படையில் ஒரு இலட்சம் ரூபா ரொக்கபணம் மற்றும் 800 இலட்சம் சரீர பிணையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் 100 இலட்சத்திலான 8 சரீர பிணைக்காக அதன் பெறுமதியிலான சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் சான்றிதழ்கள் தொடர்பிலான உறுதிபத்திரங்களை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமமானவர்கள் எனவும், குற்றவாளி கூண்டில் ஏறும் அனைவரும் சந்தேக நபர்கள் என கூறிய நீதவான், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதனால் மாத்திரம் நீதிமன்றத்தை புறக்கணிக்கலாம் என்று எண்ணிவிட முடியாது. காரணம் அவர்களும் மனிதர்கள் என நீதவான் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக சந்தேக நபரின் வெளிநாட்டு கடவுசீட்டை தடை செய்த நீதவான், விசாரணை அதிகாரிகள் அல்லது சாட்சியாளர்களை பலவீனபடுத்தும் வகையில் அழுத்தம் பிரயோகித்தால் வழக்கு விசாரணை நிறைவடையும் வரையில் விளக்கமறியலில் இருக்க நேரிடும் என நாமல் உட்பட குழுவினருக்கு நீதவான் எச்சரித்துள்ளார்.

மேலும் உரிய முறையில் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்குமாறு சந்தேக நபருக்கு உத்தரவிட்டதோடு, ஒவ்வொரு மாதத்திலும் முதலாவது மற்றும் இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. நீதி மன்றில் பூனை எல்லாவற்றுக்கும் தலை குனிந்து வணக்கம் போடும் இவர்கள் வெளியே வந்ததும் மைக் பிடிக்கும் மீடியக்கரர் முன் இவர்கள் புலி அதேநேரம் சொல்வது அரசியல் பழி வாங்கல் ஏன் இத அவர்களுக்கு நீதிமன்றில் சொல்ல முடியாது ( அரசியல் பழி வாங்கல்)
    இதை இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் அன்பர்கள் புரிந்து கொண்டால் சரி

    ReplyDelete

Powered by Blogger.