ரோஹின்யா முஸ்லிம்களுக்கும், பௌத்தர்களுக்கும் நிரந்தரத் தீர்வு காண கோபி அனான்
மியான்மரில் சிறுபான்மை ரோஹின்கயா முஸ்லிம்களுக்கும், புத்தமத தேசியவாதிகளுக்கும் இடையிலான பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக, ஐ.நா. முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் தலைமையில் 9 நபர் கொண்ட கவுன்சிலை அமைக்க மியான்மர் அரசு முடிவு செய்துள்ளது.
இந்தக் கவுன்சிலில், 3 சர்வதேச உறுப்பினர்களும், 6 உள்நாட்டு உறுப்பினர்களும் இடம் பெறுவர் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரின் ராகைன் மாகாணத்தில் வசித்து வரும் ரோஹின்கயா முஸ்லிம்களுக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment