அமைச்சர் றிசாத்தின் கவனத்திற்கு..!
ஆனமடுவ மற்றும் புத்தளம் ஆகிய தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய புத்தளம் கல்வி வலயம் 200 பாடசாலைகளைக் கொண்டுள்ளது. இவ்வலயப் பாடசாலைகளில் 82000 மாணவர்கள் உள்ளனர். இநத வலயம் விசாலமான நிலப் பிரதேசத்தையும், மிகவும் பின்தங்கிய பிரதேசங்களையும் உள்ளடக்கியுள்ளது.
இந்த அளவு பாடசாலைகளை நிர்வகிப்பதில் பாரிய சிக்கல்களும் உள்ளன. எனவே இந்த வலயம் ஆனமடுவ மற்றும் புத்தளம் என இரு வேறு கல்வி வலயங்களாக உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறு உருவாக்கப்படும் பட்சத்தில் புத்தளம் கல்வி வலயம் 103 பாடசாலைகளையும், ஆனமடுவ கல்வி வலயம் 97 பாடசாலைகளையும் உள்ளடக்கி இருக்கும்.
நாட்டில் உள்ள 80 கல்வி வலயங்கள் 150 வலயங்களாக மாற்றியமைக்கும் கல்வியமைச்சின் வேலைத் திட்டத்தில் புத்தளமும் உள்வாங்கப்பட வேண்டும். இது விடயத்தில் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தனது அதிகபட்ச ஈடுபாட்டைச் செலுத்தி கல்வியமைச்சரின் உடனடிக் கவனத்துக்கு கொண்டு வந்து மிக நீண்ட காலமாக உணரப்பட்டது வரும் இத்தேவையை நிறைவேற்றி வைக்க வேண்டும் என தயவாய் வேண்டுகிறோம்.
முஹ்ஸி
சமூக ஆர்வலர்
இந்த கோரிக்கையினை சகோதரர் ஹக்கீமுடமும் வைத்திருக்கலாமே? மிகவும் பரிதாவத்திக்குரியது நமது சமூக ஆர்வலர்களின் நிலை. அபிவிருத்தியன்று வரும்போது மட்டும் சகோதரர் றிசாட் வேண்டுமா?.
ReplyDelete