Header Ads



ஐ.எஸ். பயங்கரவாத செயற்பாடுகள், இலங்கை முஸ்லிம்களை பாதித்துள்ளது - பாது­காப்பு அமைச்சர் ருவன்

-விடிவெள்ளி-

நாட்டில் மீண்டும் விடு­தலைப் புலிகள் இயக்கம் தலை­தூக்­கவோ அல்­லது ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கர­வாத அமைப்பு உள்­நு­ழை­யவோ ஒரு­போதும் இட­ம­ளிக்­க­மாட்டோம் எனக் குறிப்­பிட்ட பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­சரும் கம்­பஹா மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ருவன் விஜே­வர்­தன, தேசிய பாது­காப்பு விட­யத்தில் முஸ்­லிம்­க­ளுடன் இணைந்து பணி­யாற்ற தாம் தயார் எனவும் தெரிவித்தார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவின் சேவைகளை கௌரவிக்கும் வகையிலும் முஸ்லிம் சமூகத்தின் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் நோக்கிலும் தேசிய ஒற்றுமைக்கான மன்றம் ஏற்பாடு செய்த பாராட்டு நிகழ்வு  வெள்ளவத்தையிலுள்ள 'த எக்ஸலன்ஸி' மண்டபத்தில் நடைபெற்றது. மன்றத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் ருவன் விஜேவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில், 

 இலங்கையில் கடந்த காலத்தில் இடம்பெற்ற போர் மற்றும் இனப்பிரச்சினை காரணமாக இந்த நாட்டில் வாழுகின்ற சகல சமூகங்களுமே பாரிய இழப்புகளைச் சந்தித்துள்ளன. அரந்தலாவயில் பௌத்த பிக்குகள் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். ஜூலைக் கலவரத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்டார்கள்.

காத்தான்குடி பள்ளிவாசலில் தொழுது கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். வத்தளையில்  தேவாலயத்தின் மீது தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.  அக்குரஸ்ஸவில் மீலாத் விழாவின் போதும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இன்று இந்த நாட்டிலிருந்து பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு சமாதானம் நிலைநாட்டப்பட்டுள்ளது. எனினும் போர் முடிந்துவிட்டது என்பதற்காக இனங்களுக்கிடையே நல்லிணக்கம் வந்துவிட்டதாக நாம் அர்த்தம் கொள்ள முடியாது.  முறையான நல்லிணக்கம் எட்டப்பட்டு சகல சமூகங்களும் ஒற்றுமைப்படும் வரை இந்த சமாதானத்தை நாம் தற்காலிகமானதாகவே கருத வேண்டியுள்ளது.

மக்கள் மனங்களில் ஏற்பட்டுள்ள வடுக்களை நல்லிணக்க செயற்பாடுகளால் ஆற்றுப்படுத்துவதன் மூலமாகவே இந்த நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகளோ அல்லது ஏனைய ஆயுதக் குழுக்களோ தலைதூக்குவதை தடுக்க முடியும்.

நாட்டில் முறையான நல்லிணக்க பொறிமுறை ஊடாக தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் அர்ப்பணிப்புடன் முன்னெடுத்து வருகின்றனர். 

நாட்டில் இனங்களை மையப்படுத்திய பிரிவினைகள் தோற்றம் பெற நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. நாம் அனைவரும் இலங்கையர் என்ற ஒரே அடையாளத்தின் கீழ் ஒரே கொடியின் கீழ் ஒற்றுமைப்பட வேண்டும்.

அரசாங்கம் தேசியப் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்துச் செயற்படுகிறது என்பதை நான் உறுதிப்படுத்துகிறேன். ஒன்றிணைந்த எதிர்க்கட்சி என தம்மை அழைத்துக் கொள்வோர் நாட்டில் மீண்டும் விடுதலைப் புலிகள் தலைதூக்குவதற்கு  அரசாங்கம் இடமளிப்பதாக மீண்டும் மீண்டும் கூறுகின்றனர்.

இது அடிப்படையற்ற அரசியல் உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டாகும். நாட்டின் பாதுகாப்புத் துறை மிகவும் உறுதியுடன் தேவையான முன்னெச்சரிக்கையுடன் கூடிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது என்பதை மிகவும் தெளிவாகக் குறிப்பிட விரும்புகிறேன்.

அதேபோன்று இந்த நாட்டில் பயங்கரவாத சக்திகளுக்கு மாத்திரமன்றி மத தீவிரவாத சக்திகளுக்கோ இன வெறுப்பைத் தூண்டுகின்ற குழுக்களுக்கோ ஒருபோதும் இடமளிக்க முடியாது. இந்த அரசாங்கம் சகிப்புத் தன்மையை கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்துள்ளது.

அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைகள் எவ்வாறு வெறுப்புணர்வுக் குழுக்களின் செயற்பாடுகள் சமூகங்களுக்கிடையே பதற்ற நிலையைத் தோற்றுவிக்கும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.  அவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெற நாம் இடமளிக்கமாட்டோம். இவ்வாறான குழுக்களை சட்டத்தின் கீழ் கொண்டுவர அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் செயற்பாடுகள் இலங்கை முஸ்லிம்களை எவ்வாறு பாதித்துள்ளது  என்பதை நான் அறிவேன். அந்த வகையில் பயங்கவரவாத குழுக்களுக்காக இந்த நாட்டில் ஆட்சேர்ப்புச் செய்யவோ அல்லது பயிற்சியளிக்கவோ இந்த நாட்டை எவரும் பயன்படுத்துவது தொடர்பில் எமது பாதுகாப்பு தரப்பும் பொலிசாரும் மிகுந்த உஷார் நிலையில் உள்ளார்கள்.

இது விடயத்தில் முஸ்லிம் சமூகம் கொண்டுள்ள அக்கறையை நான் அறிவேன். அந்த வகையில் முஸ்லிம் சமூகத்துடன் இணைந்து பணியாற்ற நாம் தயாராகவுள்ளோம் என்றார். 

No comments

Powered by Blogger.