Header Ads



லதீப் தொடர்பில், இன்று முக்கிய தீர்மானம்


பொலிஸ்மா அதிபரினால் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று -18- தீர்மானம் ஒன்று எடுப்பதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது. 

பொலிஸ் விசேட அதிரடிப் படை கட்டளை அதிகாரியை நியமிப்பது தொடர்பில் பொலிஸ் ஆணைக்குழு வழங்கிய பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொலிஸ் மா அதிபர் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார். 

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம் ஆர் லதீபை பொலிஸ் விசேட அதிரடிப் படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்குமாறு பொலிஸ் ஆணைக்குழு அண்மையில் பரிந்துரை செய்திருந்தது.  அகஸ்ட் மாதம் 09ம் திகதி முதல் இந்த நியமனம் வழங்கப்பட வேண்டிய போதிலும் இதுவரை பொலிஸ் மா அதிபரினால் நியமிக்கப்படவில்லை. 

இது தொடர்பில் பொலிஸ் மா அதிபரிடம் பொலிஸ் ஆணைக்குழு விளக்கம் கோரவுள்ளதுடன், இன்று இடம்பெற உள்ள கூட்டத்தில் இது தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என்று ஆரியதாஸ குரே கூறினார். 

அதன்படி பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இன்று தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் கூறினார். 

No comments

Powered by Blogger.