Header Ads



போதைப் பொருளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை - அவசரமாக தேவைப்படும் தடுப்பு நடவடிக்கைகள்..!

-எம்.எஸ். அமீர் ஹூசைன்-

இன்று ஒவ்வொரு சமூகத்திலும் இளம் தலைமுறையினரை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாதலில் இருந்து பாதுகாப்பதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இலங்கைக்குள் கொண்டு வரப்படுகின்ற போதைப் பொருள் தொடர்பாக அவதானிக்கையில் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டுள்ளவர்களில் சிங்களம், தமிழ், முஸ்லிம், கிரிஸ்தவர்கள்; என்ற பாகுபாடு இன்றி நான்கு இனத்தவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவருகின்றது. 

ஆனாலும் அண்மைக்காலமாக இவ்விடயம் தொடர்பாக கவனம் செலுத்தும் பேரினவாத கடும்போக்கு அமைப்புக்கள் இலங்கை வாழ் முஸ்லிம் சமூகம் மீது சீறிப் பாய்வதை காண முடிகின்றது. இலங்கைக்குள் போதைப் பொருட்களை கொண்டு வருபவர்கள் முஸ்லிம்கள் என்றும் அவர்கள் திட்டமிட்ட அடிப்படையில் பௌத்த இளைஞர்களின் எதிர்காலத்தை நாசம் செய்து வருகின்றனர் என்று குற்றம் சுமத்தி வருகின்றதையும் இங்கு குறிப்பிடாமல் இருக்க முடியாது. ஆனாலும் இத்தகைய குற்றச் செயல்களில் இன மத, பேதம் இன்றி எல்லாச் சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஈடபடுவது வெளிப்படையாகும்.

குறிப்பாக போதைப் பொருள் காரணமாக முஸ்லிம் சமூகமும் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருக்கின்றது. மொத்த சனத்தொகையில் 100.000 பேருக்கு 400 பேர் என்ற அடிப்படையில் போதைப் பொருளுக்கு அடிமையானவர்களது விகிதம் இருப்பதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்ற. உத்தியோகபூர்வமான அறிக்கைகள் இவ்வாறு இருந்தாலும் இந்த தொகை மேலும் அதிகமாக இருக்கும் என்றே கருத முடிகின்றது. போதைப் பொருளுக்கு அடிமையானவர்களின் வயதுப் பருவத்தை அவதானிக்கையில் 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்களே அதிகம் உள்ளனர். அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள நிலைமைகளை அவதானிக்கையில் படிப்படியாக முஸ்லிம் சமூகத்pற்குள்ளும் போதைப் பொருள் ஊடுருவி கணிசமான இளைஞர்களை மிக மோசமாக பாதித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.

அதிகமான பிரபல அல்லது முன்னணிப்பாடசாலை மாணவர்கள் இவ்வாறு போதைப் பொருளுக்கு அடிமையாகியுள்ள சம்பவங்கள் பல இடங்களில் நடைபெற்றுள்ளன. குறிப்பாக 10 ஆம் வகுப்பு முதல் 13 ஆம் வகுப்பு வரையான மாணவர்களை அதிகமாக இந்த விடயங்களில் கவரச் செய்வதில் இத்தகைய பாதகச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கண்வைத்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர். சில ஊர்களில் பாடசாலை மாணவிகள் கூட இதனால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. அதிகமான ஊர்களில் பாடசாலைகளை 10 ஆம் தரம் முதல் உயர்தர வகுப்புகள் வரையில் எடுத்துக் கொண்டால் ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் ஏதாவதொரு போதைப் பொருள் விற்பனை அல்லது பாவனைக்கு அடிமையாகிய 04 பேருக்கு குறையாத மாணவர்கள் உள்ளனர் எனலாம். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்வடைந்து சென்றால் இளம் சந்ததியினரின் நிலை என்னவாகும் என்பது தொடர்பாக சிந்திக்க வேண்டியிருக்கின்றது.

இன்றைய நிலையில் முஸ்லிம் சமூகமும் இவ்வாறான போதைப் பொருள் பாவனையில் இருந்து எமது இளம் தளைமுறையினரைப் பாதுகப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய அவசரத்தேவை ஏற்பட்டிருக்கின்றது. இவ்விடயத்தில் காணப்படும் கவனக் குறைவு, உதாசீனப் போக்கு, நடவடிக்கை எடுப்பதில் ஏற்படும் கால தாமதம் என்பன முஸ்லிம் சமூகம் வளமானதும் உயிரோட்டமுள்ளதுமான இளம் சந்ததியினரை இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளிவிடும் என்பதில் சந்தேகமில்லை. அதனால் முஸ்லிம் சமூகத்திற்குள் போதைப் பொருள் பாவனை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி அத்தகையவர்கள் முழுமையாக சமூகத்திற்கும் ஒவ்வொரு ஊருக்குமே அச்சுறுத்தலானவர்களாக மாறும் நிலை ஏற்பட முன்னர் நீண்ட கால அடிப்படையில் சிந்தித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டி தேவை ஏற்பட்டிருக்கின்றது.

இது தொடர்பான அறிவூட்டல்கள் பாடசாலை மட்டத்தில் அதிகமாக திட்டமிட்ட அடிப்படையில் நடைபெற வேண்டும். அத்துடன் பள்ளிவாசல் நிர்வாக சபைகள் இவ்விடயம் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி இளைஞர்களைப் பாதுகாப்பதற்காக திட்டங்களை வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். முஸ்லிம் சமூகத்தில் விரைவாகவும் ஆளமாகவும் தாக்கத்தை ஏற்படுத்தவும் அபிப்பிராயங்களை கட்டியெழுப்பவும் ஆற்றல் மிக்கவர்களே முஸ்லிம் சமூகத்தில் உள்ள மௌலவிமார்கள், உலமாக்களாவர். அதனால் இவர்கள் இவ்விடயம் தொடர்பாக பூரண தெளிவு பெற்றவர்களாக இருக்க வேண்டியதோடு அடிக்கடி வெள்ளிக்கிழமை ஜூம்ஆப் பிரசங்கங்கள் மற்றும் ஏனைய சன்மார்க்க உபதேசங்கள் என்பவற்றின் ஊடாக எம் சமூகத்தில் இளைஞர்களை போதைக்கு அடிமையாவதில் இருந்து பாதுகாக்க கடுமையாக செயலாற்ற வேண்டும். 

அத்துடன் ஒவ்வொரு ஊரிலும் மஸ்ஜித் நிர்வாகங்கள் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பாக தொடர்ச்சியாக கவனம் செலுத்தும் வகையில் செயலாற்ற செயலணியொன்றை ஏற்படுத்த வேண்டியதும் அவசியமாகின்றது. சாதாரணமான ஒரு தனி மனிதனைவிட மஸ்ஜித் நிர்வாகங்களால் கூடுதலான தாக்கத்தையும் செல்வாக்கையும் செலுத்த முடிவது இதற்கு முக்கிய காரணமாகும். 

எவ்வாறாயினும் இன்னும் 10 வருடங்கள் கழித்து முஸ்லிம் சமூகம் இது தொடர்பாக சிந்திப்பதைவிட இன்றே தூரநொக்கில் சிந்தித்து போதைப் பொருள் ஒழிப்புக்கு தேiவாயன நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசரத் தேவையாகும். அத்துடன் அரசாங்கமட்டத்தில் முன்னெடுக்கப்படுகின்ற போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு முஸ்லிம்ச மூகம் பூரணமான ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இது தொடர்பாக பொலீஸ் அதிகாரிகளுடன் இணைந்து முஸ்லிம் ஊர்களிலும் பரவி வரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த தேiவாயன நிலையான திட்டங்களை இப்போதிருந்தே ஆரம்பித்தால் இன்னும் 10 வருடங்களில் சிறந்த பிரதிபலனை அடையக்கூடியதாக இருக்கும்.

No comments

Powered by Blogger.