விக்னேஸ்வரன் கருத்துக்களை முன்வைப்பது, மிகவும் பாரதூரமானதாகும் - ராஜித
இலங்கைக்கு எதிராக எழுந்துள்ள அனைத்து சர்வதேச அழுத்தங்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்துவிடும். ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்துடன் சர்வதேச கடிவாளத்தில் இருந்து இலங்கை விடுபட்டுவிடும். ஏனெனில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவா விவகாரங்கள் ஆரம்பமாகும் முன்னர் நாம் சகல பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டுவந்துவிடுவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய அரசாங்கம் தீர்வு தொடர்பில் சிந்தித்து அதற்கமைய நகர்ந்துகொண்டுள்ள நிலையில் வடமாகாண முதல்வரின் செயற்பாடுகளும் கருத்துக்களை முன்வைப்பதும் மிகவும் பாரதூரமான விடயமாகும். எவ்வாறு இருப்பினும் தேசிய பிரச்சினைகளை தீர்வு காணும்போதும் புதிய நகர்வுகளை கையாளும் போதும் தேசிய பாதுகாப்பிற்கு அமையவே தீர்வுகள் சாத்தியமாகும் எனவும் குறிப்பிட்டது.
வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் சரவதேச விசாரணை அவசியம் என வடமாகாண முதலமைச்சர் கருத்துக்களை முன்வைத்துள்ள நிலையில் அரசாங்கதின் நிலைப்பாட்டை வினவியபோதே அமைச்சரவை ஊடகப்பேச்சாளர் ராஜித சேனாரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இன்றைய இலங்கையில் ஞானசார, மஹிந்த, விக்னேஸ்வரன் போன்ற இனவாதிகளே நாட்டின் வளர்ச்சிக்கும் ஒருமைப்பாட்டிற்கு தடையாக உள்ளனர்
ReplyDeleteI.Ekea, பின்கதவு மினிஸ்டர் பதியுதீனை மிஸ்பண்ணிவிட்டீர்களே.
DeleteI agree with you sir. But sir, some venomous activities against minor communities are being untaken by some activists in your community and within minor communities as well. They are the poision to social harmony. The government must take action against such people without delay. Mr. Vk has political hystria.
ReplyDelete