புலிகள் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்ல, கோத்தபாய நிதியுதவி - மங்கள
யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் உறுப்பினர்கள் சிலர் வெளிநாடு செல்வதற்கு தேவையான நிதி உதவிகளை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷ பெற்றுக்கொடுத்ததாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குற்றஞ்சுமத்தியுள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அது தொடர்பான மேலதிக தகவல்களை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் அமைக்கப்பட்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக உண்மைகளை கண்டறியும் நீதிமன்றத்தை ஒத்த நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவறுகள் ஏற்பட்டிருந்தால் அது தொடர்பில் தண்டனைகள் பெற்றுக்கொடுப்பதற்காக இது அமைக்கப்படவுள்ளதா அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகளில் அமைக்கப்பட்டுள்ள கலப்பின நீதிமன்றம் போன்றல்லாமல் இது முழுமையாக தேசிய நன்மைக்காக உள்நாட்டவர்களை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்படுமென்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Post a Comment