Header Ads



கனடா பொலிஸார், இஸ்லாமிய உடையணியலாம்..!


ஹிஜாப் எனப்படும் முழு நீள இஸ்லாமியர்களின் உடை அணிய எதிர்ப்புகள் கிளம்பி வரும் நிலையில் இது கனடாவின் ஒரு பிரிவு பொலிசாருக்கு அங்கீகரிக்கப்பட்ட சீருடையாக உள்ளது.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளில் இஸ்லாமிய பெண்கள் முழு நீள உடை அணிய தடை விதிக்கப்பட்டு வரும் நிலையில் கனடாவில் பெண் பொலிசாரின் சீருடையாக இந்த உடை அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, அரசாங்க செய்தி தொடர்பாளர் Scott Bardsley கூறியதாவது, இஸ்லாமியர்களின் இந்த சீருடை கனடாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது.

மேலும், இந்த சீருடையானது இருநூறு வருடங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பரந்த விளிம்பின் தொப்பி பிரபலமானதாகும். தற்போது இந்த உடை மிகவும் அரிதாகவே காணப்படுகிறது.

இந்த உடை பொலிஸ் வேலைக்கு மிகவும் பொருத்தமாக இருப்பதாக உள்ளூர் செய்தி நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உள்ளூர் ஊடகங்கள் சில, தேவைப்பட்டால் இந்த சீருடைக்கு தடை உண்டாக்கப்படும் என தெரிவித்துள்ளது.

கடந்த இரு ஆண்டுகளாக எந்தவொரு கோரிக்கைகளையும் நிறவேற்றாத நிலையில், இந்த ஆண்டிற்கு முன்னதாக 30 அதிகாரிகளின் கோரிக்கைகளின் படி அவர்களின் மதப் பண்பாட்டிற்கு இணங்க தாடி வளர்த்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

1990 ல் சீக்கிய அதிகாரிகளுக்கும் தலைப்பாகை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சீருடை, 1800 ஆம் ஆண்டு அமெரிக்க மதுபான வர்த்தகர்களை கண்காணிக்கும் பொருட்டு அனுப்பப்பட்ட பொலிசாருக்காக வடிவமைத்ததாகும். மட்டுமின்றி பிரித்தானிய ராணுவ உடைகளைப் பார்த்து இந்த சீருடைகளில் சிறிய மாறுதல்கள் கொண்டுவரப்பட்டன.

இதையடுத்து, ஸ்வீடன், நார்வே மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களில் இந்த கொள்கைகளை பின்பற்றி வருகின்றனர்.

மேலும், 10 வருடங்களூக்கு முன்னதாகவே லண்டன் மாநகர காவல் இந்த சீருடைக்கு ஒப்புதல் வழங்கி பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.