நாட்டு மக்கள் எம்முடன் இருப்பதால், எமக்கு எதுவும் நடக்காது என்று நம்புகிறோம் - முஸம்மில்
ஒரே விடயம் சம்பந்தமாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரும், பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவும் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களை வேட்டையாடுவதற்காக தேடுதல்களை நடத்துவதே தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் ஒரே பணியாக உள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்று இன்று மூன்று மணி நேரம் வாக்குமூலத்தை வழங்கிய பின்னர், ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
50 நாட்கள் சிறை வாழ்வை கழித்து விட்டு வந்து 24 மணி நேரம் செல்லும் முன்னர், இன்று விசாரணைகளுக்கு சமூகமளிக்குமாறு இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
இதுவரை இரண்டு கடிதங்கள் கிடைத்துள்ளன. ஒரு கடிதம் எப்.சீ.ஐ.டி அனுப்பியது மற்றைய கடிதம் இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அனுப்பிய கடிதம்.
அரச பொறியியற் கூட்டுத்தாபனத்திற்கு விற்பனை கண்காணிப்பு அதிகாரிகளை நியமித்தமை குறித்து விசாரணை நடத்துவதற்கு எனக் கூறியே இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இரண்டு விசாரணையாளர்களும் ஒரே விடயம் தொடர்பாகவே விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
வேலை செய்ய முடியாத இந்த அரசாங்கம் ஒரே விடயம் தொடர்பில் மூன்று இடங்களில் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தி வருகிறது.
இதன் மூலம் வேலை செய்ய முடியாத இந்த அரசாங்கம் மக்களுக்கு நகைச்சுவைகளை வழங்கி வருகிறது. எவ்வாறாயினும் சட்டத்தை மதிக்கும் நபர்கள் என்ற வகையில் நாங்கள் விசாரணைகளுக்கு சமூகமளித்துள்ளோம்.
அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு இலஞ்ச ஆணைக்குழு 16 முறை அழைப்பு விடுத்துள்ளது. அவர் ஒரு முறைக்கூட ஆஜராகவில்லை.
சட்டத்தை வளைக்கும் பொலிஸ் மா அதிபர் அவர் வளைவாரே தவிர, சட்டத்தை அந்த பக்கம் வளைப்பதில்லை. இதற்கு பதிலாக பொலிஸ் மா அதிபர் அவர்களுக்கு முன்னாள் வளைகின்றார்.
நாங்கள் தவறு செய்யவில்லை என்பதால், அச்சமின்றி வந்து விசாரணைகளை எதிர்க்கொள்கின்றோம். ஒரே விடயம் தொடர்பில் மூன்று இடங்களில் விசாரணைகளை நடத்தி எம்மை சிக்க வைக்க அரசாங்கம் ஒரு பொறியை தேடுகிறது.
நாட்டு மக்கள் எம்முடன் இருப்பதால் எமக்கு எதுவும் நடக்காது என்று நாங்கள் நம்புகிறோம் எனவும் முஸம்மில் கூறியுள்ளார்.
u mean 4 kaal makal
ReplyDeleteNice one
Deletepulla nalla payanthu
ReplyDelete(இது இவரின் இவ்வார காமடி )கடந்த ஆட்சிக்காலத்தில் இவர்கள் எந்த விதமான மோசடிகளும் செய்யவில்லை.நாட்டில் உள்ள பணம் பொருளாதாரம் அனைத்தையும் சுரண்டினார்களே தவிர நாட்டு எந்தப்பிரச்சினையும் செய்ய வில்லை நாடு இருந்த இடத்தை விட்டு உசும்பவும் இல்லை.அதனால் இவர்கள் நாட்டுக்கு எந்த விதமான துரோகமும் செய்ய வில்லை.அப்பாவிகள் அதனால் இவர்களின் பக்கம் மக்கள் சார்ந்து இருக்கிறார்கள்.நல்ல வேலை நாடு அசையும் சொத்தாக இருந்து இருந்தால் அதையும் விற்று சுருட்டி இருப்பார்கள்.
ReplyDeleteAddi seruppala
ReplyDeleteSERUPPU PIYYUM
ReplyDelete