Header Ads



'நீங்களே, உங்கள் மனைவியை ஏன் கொன்றிருக்க கூடாது'

(விகடன்)

ஒடிஷாவில் கலாகண்டி மாவட்டத்தில் தானா மஜ்கி என்பவரின் மனைவி அமர்ந்தேயி காச நோய் காரணமாக பவானிபட்னா மருத்துவமனையில் இறந்து போனார். மனைவியின் சடலத்தை சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்ல மஜ்கியிடம் பணம் இல்லை. கெஞ்சி பார்த்தும் அமரர் ஊர்தி தர மருத்துவமனை நிர்வாகம் மறுத்து விட்டது. வேறு வழியில்லாத நிலையில், இறந்து போன தனது மனைவியின் உடலை தோளில் சுமந்தவாறு தனது கிராமம் நோக்கி நடக்கத் தொடங்கினார் மஜ்கி.  கூடவே மஜ்கியின் மகளும் அழுதபடியே சென்றார்.

தோளில் சடலத்துடன் ஒருவர் நடப்பதையும் சிறுமி ஒருவர் அழுதபடியே சென்றதையும் பார்த்த பின்னரும் யாரும் உதவிக்கு வரவில்லை. மருத்துவமனையில் இருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் மஜ்கியின் கிராமம் இருந்தது. தந்தையும் மகளும் 12 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று விட்டனர். சில பத்திரிகையாளர்கள்  மாவட்ட ஆட்சியருக்கு தகவல் அளித்தனர். ஆட்சியரின் உத்தரவின் பேரில் அமரர் ஊர்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  தோளில் மனைவியின் சடலத்துடன் மஜ்கி நடந்து செல்லும் காட்சி மீடியாக்களில் வெளியாகி ,இந்தியா முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் ஒடிஷா அரசு இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளவில்லை. மத்திய அரசும் இது குறித்து வாய் திறக்கவில்லை.

ஆனால், மஜ்கி மனைவியை சுமந்து செல்லும் புகைப்படம் கடலையும் தாண்டி பெரிய அதிர்வை ஏற்படுத்தி விட்டது. 'இந்தியாவில் மஜ்கி என்ற மனிதரின் நிலை... ; என மனைவி சடலத்தை தோளில் சுமந்து செல்லும் மஜ்கியின் புகைப்படம் வளைகுடா நாடுகளிலும் மீடியாக்கள் செய்தியாக வெளியிட்டிருந்தன. இதனை பார்த்த பஹரைன் பிரதமரும் இளவரசருமான கலீஃபா பின் சல்மான் அல் கலீபா , மஜ்கியின் குடும்பத்திற்கும் நிதியுதவி வழங்க முன்வந்துள்ளார்.

இது குறித்து கல்ஃப் டெய்லி நியூஸ் பத்திரிகை, '' மஜ்கியின் புகைப்படத்தை பார்த்த பிரதமர் மிகவும் வேதனையடைந்துள்ளார். அந்த ஏழை குடும்பத்திற்கு ஏதாவது உதவி செய்ய நினைக்கிறார்  பஹரைன் அரசு அங்குள்ள இந்திய தூதரகத்தை அணுகி மஜ்கி குறித்த விபரம் கேட்டுள்ளது ''  என செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே தனது மனைவியின் உடல் அடக்கத்தின் போது கலாகண்டி மாவட்ட ஆட்சியர், 'நீங்களே உங்கள் மனைவியை ஏன் கொன்றிருக்க கூடாது' என விசாரணை நடத்தியதாக மஜ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மஜ்கி ஒரு தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், '' நான் ஏன் என் மனைவியை கொல்ல வேண்டும். அப்படி கொல்ல வேண்டுமென்று நினைப்பவன் ஏன் இவ்வளவு காலமும் அவரை மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும். என் மனைவியை கொன்றிருந்தால், அவளை எங்கோ ஒரு இடத்தில் புதைத்து விட்டு வந்திருப்பேனே. அவளது உடலை சுமந்து செல்ல என்ன அவசியம் வந்தது.'' என கேள்வி எழுப்பியுள்ளார்.


3 comments:

  1. இந்தியாவில் படித்த நாய் கேட்ட கேள்விதான் இது காட்டுமிராண்டிகள் கூடிய விரைவில் இந்தியா அல்ல்லாஹ்வின் சோதனைக்கும் தண்டனைக்கும் உள்ளாகும் இன்ஷா அல்லாஹ்,

    ReplyDelete
  2. Utter shame to the so-called biggest democracy. Modi led BJP & RSS's callous indifference toward the suppressed people in India. Becoming a Muslim is the sole and tangible solution to get free from any sort of discrimination.

    ReplyDelete
  3. Utter shame to the so-called biggest democracy. Modi led BJP & RSS's callous indifference toward the suppressed people in India. Becoming a Muslim is the sole and tangible solution to get free from any sort of discrimination.

    ReplyDelete

Powered by Blogger.