"பசில் ராஜபக்சவின் வீட்டு, உப்பை சாப்பிடும் பவித்திரா"
கூட்டு எதிர்க்கட்சியினால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கும் மஹிந்த தலைமையிலான புதிய கட்சியின் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி என்று இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பவித்ராவுக்கு செயலாளர் பதவி வழங்குவதற்கு பசில் ராஜபக்ச உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு புதிய தொகுதி அமைப்பாளர்கள் தெரிவு செய்வது தொடர்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் பவித்ரா பசில் வீட்டு உப்பை உண்பதாகவும் ஏனெனில் புதிய கட்சியின் செயலாளர் பதவி அவருக்கு வழங்குவதற்கு பசில் உறுதியளித்துள்ளதாலேயே பவித்ரா பசில் புராணம் பாடுவதாகவும் அமைச்சர் டிலான் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment