அசத்தியத்தோடு ஒருபோது சமரசம் செய்யமாட்டோம், மிரட்டியும் பணியவைக்க முடியாது - உவைஸி
அகில இந்திய மஜ்லிசே இத்திஹாத்துல் முஸ்லிமின் கட்சி கடந்து வந்த பாதை குறித்து அக்கட்சியின் தலைவர் அசத்துத்தின் உவைஸி பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வரலாற்று ரீதியிலான உரையை நிகழ்த்தியுள்ளார். அந்த உரையின் சாராம்சமாக,
உவைஸியின் தந்தையின் காலத்தில் காங்கிரஸால் அவர்களுக்கு ஏற்பட்ட அடுக்கடுக்கான தொல்லைகள் அணிவகுத்து வந்தபோதும் அசத்தியத்தோடு தாங்கள் சமரசம் செய்தது இல்லை என்பதை அழுத்தமாக பதிவு செய்தார்.
நாங்கள் அப்துல்வாஹித் உவைஸியின் வாரிசுகள்.
அசத்தியத்தோடு ஒருபோது சமரசம் செய்து கொள்ள மாட்டோம் எங்களை மிரட்டியும் பணிய வைக்க முடியாது.
எனது தந்தையை 6 க்கு 6 அளவு கொண்ட சிறிய அறையில் 11 மாதங்கள் அப்போதைய அரசங்கம் சிறை வைத்திருந்தது.
எனது தந்தையின் வங்கி கணக்கு முடக்கப்பட்டது.
தாருஸ்ஸலாம் வழக்கில் சிக்கி கொண்டது.
எங்கள் வீட்டில் தண்ணீர் இணைப்பு துண்டிக்கபட்டது.
எங்கள் பகுதியில் இருந்து உஸ்மானியா பல்கலைகழகத்திற்கு படிப்பதற்காக பல கிலோ மீட்டர் நடந்து செல்லும் துயரம் எங்களுக்கு ஏற்பட்டது.
எங்கள் வீட்டு குழந்தைகளும் பெண்களும் மஹ்புபிய பள்ளிவரை சென்று தண்ணீர் குடிக்கும் நிலை உருவாக்க பட்டது.
எங்களின் படிப்புக்காக எங்கள் குடும்ப நகைகளை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டோம்.
அனைத்தையும் எதிர்கொண்டு வென்றோம்
ஆயினும் நாங்கள் அசத்தியத்திற்கு அடிபணியவில்லை.
இனியும் அடிபணிய மாட்டோம்.
மேற்கண்டவாறு தொடங்கி மஜ்லீஸ் கட்சி கடந்து வந்த பாதையை சிறப்பாக எடுத்து கூறினார்.
Post a Comment