வசீம் தாஜுதீன் படுகொலை காணொளி - கனடாவிலிருந்து ஆய்வறிக்கை வந்தது
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பான காணொளி குறித்த கனடா பல்கலைக்கழக ஆய்வறிக்கை இன்று -31- நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட தினத்தில் அவர் கிருலப்பனை அருகே வைத்து கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாகவும், அவரது படுகொலைச் சம்பவத்தின் போது முக்கிய பிரமுகர் ஒருவர் மற்றும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருந்ததாகவும் புலனாய்வுப் பிரிவு விசாரணைகள் தெரிவிக்கின்றன.
எனினும் இது தொடர்பான காணொளி துல்லியமாக நபர்களை இனம் காணும் வகையில் இல்லாத காரணத்தினால் நீதிமன்ற உத்தரவின் பிரகாரம் கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பிய பல்கலைக்கழகத்தின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டிருந்தது.
குறித்த காணொளிகளை ஆய்வு செய்த பல்கலைக்கழகம் வழங்கிய அறிக்கை இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்புலனாய்வுப் பொலிசாரினால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தாஜுடீன் படுகொலை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்ட மற்றும் உள்வந்த அழைப்புகள் தொடர்பான தரவுகள் அழிக்கப்பட்டிருப்பது குறித்து விசாரணை நடத்துமாறும் கொழும்பு மேலதிக மாஜிஸ்திரேட் நீதவான் நிஷாந்த பீரிஸ் குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
Post a Comment