Header Ads



துரிதமான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்த, அனைவரும் முன்வர வேண்டும் - சுபியான் மௌலவி

-பாறுக் ஷிஹான்-

துரிதமான மீள்குடியேற்றத்தை உறுதிப்படுத்துவதற்காக சிந்திக்க அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும் என மக்கள் பணிமனை தலைவர் பி.எஸ்.எம் சுபியான் மௌலவி தெரிவித்துள்ளார்.

அவர் தனது ஊடக அறிக்கையில்  மேலும் தெரிவித்துள்ளதாவது

யாழ்ப்பாணம் மாவட்ட முஸ்லிம்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை, இங்கு தடி எடுத்தவர்களெல்லாம் வேட்டைக்காரர்கள். இவ்வாறானவர்களுக்கு தாங்களும் சமூகத்தின் தலைவர்கள்தான் என்ற நினைப்புடன் ஒரு சிலர் ஆட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றனர் என்று பரவலாகப் பேசிக் கொள்வதை நாம் அறிவோம்.

உண்மையில் இந்நிலை மாற்றப்பட வேண்டும். இதற்கு நாம் என்ன செய்யலாம். சமூகத்தை எவ்வாறான வழியில் ஒன்றிணைக்கலாம் அவர்களுக்குரிய அந்தஸ்துகளை எப்படி வழங்கலாம், சமூகத்தின் துரித மீள்குடியேற்றத்தை எவ்வாறு ஒன்றிணைந்து செயற்படுத்தலாம் என்பது பற்றி நம்மில் பலரும் கவலையுடனேயே உள்ளோம்.
எவ்வாறாயினும் நம் சமூகத்தை ஓர் கட்டமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டும்.

ஏற்கனவே இது தொடர்பாக மூன்று வகையான வழிமுறைகள் மக்கள் பணிமனையின் பிரசுரத்தில் குறிப்பிட்டுள்ளோம்.

இதில் ஒன்றுதான் சமூகத்தில் நற்பணியாற்றிவருபவர்களுக்கு வாய்ப்புக்களை வழங்கி ஒரு கூட்டு செயற்பாட்டை எல்லோரும் ஒன்றிணைந்து முன்னெடுப்பதாகும். வாய்ப்புக்களைப் பெற்றுக் கொள்ள விருப்பமுள்ள ஒவ்வொருவரும் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டவர்களாவர்.

இதன்படி சமூகமேம்பாட்டை மிள்குடியேற்றத்தை மையமாக வைத்து நமது தேவைகளை அடையாளப்படுத்தி ஒவ்வொரு விடயத்திற்கும் குலுக்கு முறையில் விடயங்கள் தெரிவு செய்யப்பட்டு ஒவ்வொரு தரப்பினருக்கும் பொறுப்புக்களை ஒப்படைத்து மாதத்தில் ஒருமுறை இக்குழுவின் அனைத்து பொறுப்புதாரிகளும் ஒன்றிணைந்து அவர்களுக்கு தரப்பட்ட விடயங்களின் முன்னேற்றம் சவால்கள் பற்றிய விளக்கத்தை எழுத்து மூலமும் உரையாடல் மூலமும் தெளிவுபடுத்துவதுடன் அடுத்த மாதத்திற்கான வேலைத்திட்டப்பணிகள் தொடர்பாக முன்வைக்கப்பட்டு கலந்துரையாடப்பட்டு தீர்மானமும் எடுக்கப்பட வேண்டும். 

இக் கலந்துரையாடலின் இறுதியில் பொதுவான மாதாந்த முன்னேற்ற அறிக்கை தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிவிக்கப்படுதல் வேண்டும். இவ் ஒன்றுபட்ட குழுவினருக்கு தெளிவான யாப்பு தயாரிக்கப்படுவதுடன் நல்ல அழகான பெயரையும் வைக்க முடியும். 

இத்திட்டம் தொடர்பாக மேலும் கலந்துரையாடி எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய நடைமுறை சாத்தியமான வடிவத்தை இதற்கு வழங்க முடியும்.  எனவே இத்திட்டம் தொடர்பாக யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களும், பள்ளிவாசல் நிர்வாகிகளும், அமைப்புக்களும் சிந்திக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்த வேண்டும் என அவர் மேலும் கூறியுள்ளார்.

2 comments:

  1. சுபியாண் மொளவி அவர்கள் ஒற்றுமையை பற்றி கூறியுள்ளார் வரவேற்கத்தக்கதும் பாராட்டுக்குரியதும் யாழ் கிளிநொச்சி சம்மேளனம் என்று ஒண்று இயங்கிக்கொண்டிருக்கும்
    போது இண்னும் ஒரு அஅமைப்பு உறுவானால் இன்னும் பிரச்சனை அதிகமாகுமல்லவா
    தடி எடுத்தவனேல்லாம் வேட்டைக்காரன் போல்ஆகிவிடும்மல்லவா,

    ReplyDelete

Powered by Blogger.