Header Ads



மேலும் காத்திருக்கிறது வெட்டு..!

ஏற்றுக்கொள்ளக் கூடிய நியாயமான காரணங்கள் இன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 65ஆவது ஆண்டு விழா மாநாட்டை புறக்கணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு விலகியவர்கள் என்று கருதப்படுவார்கள் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க, மகிந்த ராஜபக்ச உட்பட கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்களுக்கு கட்சியின் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், எந்த நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது மாகாண சபை உறுப்பினராவது மாநாட்டை புறக்கணித்து, ஊடக சந்திப்புகளை நடத்தி மாநாட்டை, விமர்சித்து, மாற்று மாநாட்டை நடத்துவார்களாயின் அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் என கருதப்பட மாட்டார்கள்.கட்சியின் ஒழுக்கம் அனைவருக்கும் பொதுவானது.

கட்சிக்கோ,கட்சியின் தலைமைக்கோ எதிராக செயற்பட்டு, எவராவது கட்சியை பிளவுப்படுத்த முயற்சித்தால், முயற்சிக்கும் அனைவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. evrey time same statement but no action lol

    ReplyDelete
  2. Only statement no action. So take sever action against those culprits to save SLF

    ReplyDelete

Powered by Blogger.