Header Ads



பாரா­ளு­மன்­றத்தில் இப்படியும் நடந்தது

-விடிவெள்ளி-

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்த மஹிந்த அணி ஆத­ரவு எம்.பி. யான விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு தனக்கு ஒதுக்­கப்­பட்­டி­ருந்த நேரத்தை மேல­திக நேர­மாக வழங்­கிய இரா­ஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லாஹ் சபையில் பிர­சன்­ன­மா­கி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி ராஜபக் ஷவின் பாராட்டைப் பெற்றுக் கொண்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை இறந்­த­வர்­களின் பதிவு தற்­கா­லிக சட்ட மூல விவா­தத்தில் இடம்­பெற்­றது.

இதில் மஹிந்த ஆத­ரவு எம்.பி. யான விம­ல­வீர திஸா­நா­யக்க மிக மோச­மாக நல்­லி­ணக்க அரசை விமர்­சித்து உரை­யாற்றிக் கொண்­டி­ருந்தார்.

இவரின் உரையை வர­வேற்று மஹிந்த ராஜபக்ஷவும் அவ­ரது ஆத­ரவு அணி­யி­னரும் மேசையில் தட்டி வர­வேற்பும் உற்­சா­கமும் 
வழங்கிக் கொண்­டி­ருந்­தனர்.

அப்­போது சபைக்கு தலைமை தாங்கிக் கொண்­டி­ருந்த லக்கி ஜெய­வர்­தன விம­ல­வீர திஸா­நா­யக்­கவின் நேரம் முடிந்­து­விட்­ட­தாகக் கூறி அடுத்த பேச்­சா­ள­ரான அமைச்சர் ரவூப் ஹக்­கீமின் பெயரை அழைத்தார்.

இத­னை­ய­டுத்து அமைச்சர் ஹக்கீம் பேச தயா­ரா­ன­போது அவ­ரது ஒலி­பெ­ருக்­கியும் முடுக்­கி­வி­டப்­பட்­டது.

இதன் போது எழுந்த மஹிந்த ஆத­ரவு அணி எம்.பி. யான கெஹ­லிய ரம்­புக்­வெல்ல விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு மேல­திக நேரம் வழங்­கு­மாறு வலி­யு­றுத்­தினார்.

ஆனால் லக்கி ஜெய­வர்­தன அவரின் நேரம் முடி­வ­டைந்­த­விட்­ட­தாக மீண்டும் கூறவே மஹிந்த ஆத­ரவு அணி எம்.பி.யினர் பலர் எழுந்து நின்று மேல­திக நேரம் வழங்க வேண்­டு­மென கூச்­ச­லிட்­டனர்.

அதன்­போது எழுந்த அரசின் ராஜாங்க அமைச்சர் ஹிஸ்­புல்லா தனது நேரத்தில் 5 நிமி­டங்­களை விம­ல­வீர திஸா­நா­யக்­க­வுக்கு வழங்­கு­வ­தாக கூறினார்.

இதனால் மஹிந்த ராஜபக் ஷவும்அவ­ரது ஆத­ரவு அணி­யி­னரும் மேசை­களில் பல­மாகத் தட்டி வரவேற்கவே ஹிஸ்புல்லா சிரித்தவாறு அமர்ந்து கொண்டார்.

ஹிஸ்புல்லா கொடுத்த 5 நிமிட மேலதிக நேரத்தில் நல்லாட்சி அரசை மேலும் மோசமாக விமலவீர விமர்சித்தார்.


5 comments:

  1. மக்களால் புறக்கணித்து தூக்கி வீசப்பட்ட குப்பைகளை சேர்த்துக் கொண்டால் இதுவும் வரும் இதுக்கு மேலையும் வரும். "பாத்திரம் அறிந்து பிச்சை இட" வேண்டுமென்று சும்மாவா சொன்னார்கள்.

    ReplyDelete
  2. Good Lesson to My3, keeping people like Hisbullah.....

    ReplyDelete
  3. முன்னாள் நண்பர்கள், இதைத்தான் உள்ளே இருந்து றொட்டிக்கு மாவு குலைப்பது,என்பது .

    ReplyDelete
  4. He showed his true color.This man is most dangerous and do what eve thing for money.He stood firmly supporting Anti Muslim Mahinda during Presidential election. Also good lesson for this government to keep such double standard stooge. He is shame to Muslim community.

    ReplyDelete
  5. என்ன புதினம் JM Hisbulllah விற்கு எதிரான பின்னூட்டங்களை பதிந்துள்ளார்கள்.
    நலம் நலம்

    ReplyDelete

Powered by Blogger.