Header Ads



அவுஸ்திரேலியாவுக்கு செல்ல, சிறுநீரகங்களை விற்கும் இலங்கையர்கள்..!

அவுஸ்திரேலியாவுக்கு படகுகள் மூலம் செல்வதற்காக இலங்கை அகதிகள், தமது சிறுநீரகங்களைவிற்பனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் நியூஸ்கோப் என்ற செய்திசேவை, இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

கடந்த 3 வருடங்களாக தாம் மேற்கொண்டு ஆய்வின்படி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகஅந்த சேவை குறிப்பிட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவில் உள்ள அகதிகளின் ஆர்வலரான சாமுவேல் சந்திரஹாசன், இது தொடர்பில்கூறும்போது,

கடந்த மூன்று வருடங்களில் சுமர் 500 இலங்கை அகதிகள், 3000 டொலர்கள்என்ற விலைகளில், அவுஸ்திரேலியாவுக்கான தமது படகு பயணங்களுக்காக சிறுநீரகங்களைவிற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமக்கு கிடைத்த தகவல்களின்படி கொழும்பில் உள்ள வைத்தியசாலைகளிலேயே சிறுநீரகங்கள்அகற்றப்படுகின்றன என்றும் சந்திரஹாசன் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நியூஸ்கோப்பின் ஆய்வின்படி, அவுஸ்திரேலியாவில் சிறுநீரகங்களுக்கானகேள்வி உள்ள நிலையில் சுமார் 100 அவுஸ்திரேலியர்கள், சிறுநீரக கொள்வனவுக்காக பணம்செலுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பில் உள்ள 13 வைத்தியர்கள் இந்த சிறுநீரக அகற்றல் நடவடிக்கையில் தொடர்புகொண்டுள்ளதாகவும் நியூஸ்கோப் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள இலங்கை அகதிகளிடம் நியூஸ்கோப் வினவிய போது தமது உறவினர்கள்,அவுஸ்திரேலியா செல்வதற்காக சிறுநீரகங்களை விற்பனை செய்வது தமக்கு தெரியும் என்றுகுறிப்பிட்டுள்ளனர்.

சிலர் தமது பிள்ளைகளை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்புவதற்காக சிறுநீரகங்களை விற்பனைசெய்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை ஒவ்வொரு வருடமும் மனித உடலுறுப்புகளை பெற்றுக்கொள்வதற்காக இஸ்ரேல்;,மலேசியா, மாலைத்தீவு என்று பல நாடுகளின் சுமார் 1000 பொதுமக்கள், இலங்கைக்குவிஜயம்செய்து வருகின்றனர்.

இதேவேளை இலங்கையின் வைத்தியர்களுக்கு ஒரு சிறுநீரக வர்த்தகத்துக்காக 60ஆயிரம்டொலர்களை வரை வருமானமாக கிடைக்கிறது.

அதேநேரம் தமக்கும் இந்த வருமானத்தில் பங்கிருப்பதால் இலங்கையின் அதிகாரிகளும் இந்தவர்த்தகத்தை கண்டும் காணாமல் இருப்பதாக நியூஸ்கோப் குறிப்பிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.