உதய கம்மன்பில, ஒரு பயங்கரவாதி
இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் பாலம் அமைக்கப்பட்டால் அதை குண்டு வைத்துத் தகர்ப்போம் எனக் கூறும் உதய கம்மன்பில ஒரு பயங்கரவாதியே என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.
குண்டு வைக்கும் செயற்பாடுகளை மேற்கொள்வோர் பயங்கரவாதிகளே எனக் குறிப்பிட்ட அமைச்சர்; குண்டு வைக்கப்படபோவதாகக் கூறுவதானால் உதய கம்மன்பிலவும் பயங்கரவாதியாகவே இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
நிதியமைச்சில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டின்போது ஊடகவியலாளரொருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர்;
கடந்த வாரம் இந்தியா இலங்கைக்கு ஒருதொகை அம்பியூலன்ஸ் வண்டியை வழங்கியபோது இந்திய டாக்டர்களுக்கும் தாதிகளுக்கும் சாரதிகளுக்கும் இலங்கையில் தொழில் வாய்ப்பு வழங்கப்போவதாகப் புரளியைக் கிளப்பினர். இப்போது என்ன நடந்தது?
யுத்த குற்ற விசாரணைக்காக ‘ஹைபிரிட்’ நீதிமன்றம் அமையப் போவதாக புரளிகளைக் கிளப்பினர். அவ்வாறு எதுவும் இடம்பெற்றதா? அது போன்றுதான், ஒன்று இடம்பெறுமுன்பே அதைப்பற்றி விமர்சிப்பது புரளியைக் கிளப்புவது சிலரது தொழில். அதையே இப்போதும் செய்கின்றனர்.
அதேபோன்றுதான் இலங்கை – இந்தியாவுக்கிடையில் பாலம் அமைப்பது தொடர்பில் ஆலோசிக்கப்பட்டு வரும்போதே அதைப்பற்றி விமர்சித்தும் முடித்துவிட்டார்கள். அதைக் கணக்கிலெடுக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
இவர் கம்மன்பிலயா அன்றேல் Gonmanpilaya?
ReplyDelete