Header Ads



உலமாக்கள் பணம் சம்பாதித்தால், உங்களுக்கு ஏன் வலிக்கிறது..?

-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி-

மத்ரஸாக்களில் படித்து பட்டம் பெற்ற உலமாக்கள் உழைத்து வீடு கட்டி சகோதரிகளுக்கு திருமணம் முடித்துக் கொடுக்க பள்ளியிலோ அறபு மத்ரஸாக்களிலோ போய் சேர்ந்தவுடன் பள்ளி நிர்வாகிகளும் மத்ரஸா முகாமைத்துவக் அதிகாரிகளும் ஆயிரம்  நிபந்தனைகளுடன் மாதம் பத்து அல்லது பதினைந்தாயிரம் ரூபாய்கள் மட்டுமே என்ற நிபந்தனையுடன் கடமை புரிவதற்கு இணைத்துக் கொள்கிறார்கள்

சரி போனால் போகட்டும் பொறுத்துப் போவோம் என்று உலமாக்கள் கடமை செய்ய ஆரம்பிக்கிறார்கள் குடும்பச் சுமை ஆட்டிப்படைக்க வருமானப் பற்றாக்குறை காரணமாக மார்க்கத்துக்கு பணியாற்றிக் கொண்டே வேறு ஏதாவது தொழில் செய்து முன்னேறலாமே என்று உலமாக்கள் ஏதாவது தொழில் செய்ய ஆரம்பித்து  அல்லாவிற்கு பயந்து ஏதோ ஹலாலான முறையில் சம்பாதிக்கின்ற போது  அவர்களின் முதல் எதிரிகளாக மாறுவது  அவர்களை மதித்து பள்ளிவாசல்களுக்கும் மத்ரசாக்களுக்கும் அவர்களை அழைத்து வந்த அவர்களது நிர்வாகிகளும் முகாமைத்துவ உறுப்பினர்களும் தான்

காரணம் உலமாக்கள் சமூகத்தில் மதிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்ற சிந்தனை உள்ள அவர்களிடம் உலமாக்கள் சமூகத்தில் செல்வந்தர்களாக தலை நிமிர்ந்து வாழ்வது தவறான ஒன்று என்ற சிந்தனையும் கூடவே உள்ளது.

எவராயினும் சரி எங்கள் பணத்துக்கும்  அந்தஸ்த்துக்கும் வாலாட்டி கத்தம் பாதிஹா ஓதிக்கொண்டு இருப்பதைத் தவிர வேறு வழி அவர்களுக்கில்லை என்ற எண்ணமும் அதிகமான தனவந்தர்களிடம் உண்டு

நாலு காசு சம்பாதிச்சு குடும்ப பொழப்பு நடத்துண்டு கூப்பிட்டா, இவன் எங்கள விட காசு ஒழைக்கிரானே என்ற காழ்ப்புணர்ச்சியைத் தவிர வேறொன்றும் இவர்களுக்கு கிடையாது

பொது மக்களால் சமூகத்தில் உயர்நதவர்கள் கௌரமானவர்கள் என்று அல்லாஹ்வின் மாளிகையையும் நாளைய தலைவர்கள் உருவாகும் கலாசாலைகளையும் நிர்வகிக்க பொறுப்பு வழங்கப்படுகின்ற போது  இம்மனிதர்கள் கண்ணியமிக்க உலமாக்களுக்கு செய்கின்ற  மிகப்பெரும் துரோகம் தனது சுய இலாபத்திற்காக யாரை வேண்டுமாயினும் எப்படியாவது பொய் , புறம் , கோள் , அவதூறு , என்று இல்லாத பொல்லாதவைகளை பரப்பி தரம் வாய்ந்த அவர்களை குறித்த அந்த பதவியிலிருந்து நீக்கி சந்தையில் குறைந்த விலையில் கிடக்கின்ற கூழாங்கற்களை வைத்துக் கொண்டு மக்களுக்கு நாடகம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் அந்த பதவிகளை வைத்து தாம் கள்ளத்தனமாக உழைக்கவும் சம்பாதிக்கவும் அந்த கௌரவமான பணியையே தொழிலாக்கி விட்டு சொந்த தொழில் செய்கின்ற உலமாக்களுக்கு எதிராக அவதூறையும் பரப்பிவிடுகிறார்கள்

அந்த இடத்தில் அல்லாஹ்வை மாத்திரம் அஞ்சி செயற்படவேண்டிய சமூகத்தின் கௌரவமானவர்களின் நிலையே இப்படியெனில் சமூகத்தின் அங்கத்தவர்களின் நிலையை என்னவென்று சொல்வது ?

சமூகத்தில் நலைநிமிர்ந்து வாழவேண்டிய உலமாக்களை தலை குனியச் செய்வதால் அவர்கள் சாதிப்பதுதான் என்ன ?

அவர்களாகவே திருந்தா விட்டால் வெகு சீக்கிரம் காலம் அவர்களுக்கு பதில் சொல்லும்.

24 comments:

  1. First of all let us have a look at the following simple
    questions :
    1. Who are the ULEMMAS and why they enrolled to learn
    religion ?
    2. What do they do to their community with their knowledge
    of Islam ?
    3. Why do they think they are worthier than the money they
    get for their services ?
    4. Why does the community treat Ulemmas poorly ?
    5. Were prophet Muhammad and his Sahabah paid for their
    services wholesomely ?
    6. Has the religion become a business or not ?

    ReplyDelete
    Replies
    1. Nice question! But without proper income how can possible! Ok because of allah the ulama will live simple but its must to their family! Its able to lose his family life! Dont compare the situation before 1400 yrs that time one transaction or few time buisinees ful enough to cover expence of the day the situation of now its too complicated ! Think practicaly i hope u will understand.

      Delete
  2. Will the respected scholar in islam play the game indoor as this issue has to be discussed within the frame of muslims' reference? Otherwise this sort of writings published in sociamedia may act as mirrors which reflect not only the good image but bad scars also.

    ReplyDelete
  3. Will the respected scholar in islam play the game indoor as this issue has to be discussed within the frame of muslims' reference? Otherwise this sort of writings published in sociamedia may act as mirrors which reflect not only the good image but bad scars also.

    ReplyDelete
  4. தலைவரே

    உங்கள் முதல் பந்தியே தப்பாக உள்ளதே

    நீஙகள் ஹலாலாக உழையுங்கள் , ஆனால் பிழையானவைகளை ,ஹலாலாக செய்யாதீகள் சரி காணாதீர்கள்

    இஸ்லாம் விற்பனைப்பொருளல்ல

    விருப்பத்திறகு பின்பற்ற அவரவர் வீட்டுச்சொத்துமல்ல, அல்லாஹ்வின் வேதம்

    ReplyDelete
  5. When someone spread a news again and again to justify their point of view they should know to respect others thoughts/ problems as well. That's the prerequisite of ethical writing. Since you have the opportunity you can't just justify yoursef. Allah guide us all.

    ReplyDelete
  6. The writer brought out an important issue which must be discussed publicly, no need to be inside only. The Ulema should have the intention learning Theen for the sake of Allah and to enlighten the community. However, it is acceptable that he gets paid and allowed to work outside if his contract permits. The above comments are out of ignorance.

    ReplyDelete
  7. ஷேக் அவர்களின் கட்டுரைகள் வரவேற்கக்கூடியவையாக இருந்தாலும் சிலவிடயங்களை நாம் பல தரப்பார்களும் கவனத்தில் கொள்ளவேண்டும் 1.உலமாக்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் அளவுக்கு அவர்கள் சார்ந்த தொழில் அதிகரிக்கவில்லை என்பதோடுஅதிகரிக்கவும் மாட்டாது பள்ளிகளின் எண்ணிக்கை ,மத்ரசாக்களின் எண்ணிக்கை வருடாவருடம் வெளியேறும் உலமாக்களின் அளவுக்கு அதிகரிப்பது இல்லை,இதனால் பள்ளிவாசல்களும் அரபு மத்ரசாக்களும் குறைந்த சம்பளத்துக்கு ஆள் பிடித்துக் கொள்வதில் கவனம் செலுத்துவதில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது அதே வேளை இன்னும் சில விடயங்களை கவனத்தில் கொள்ளவேண்டும் பள்ளிவாசல்களும் மத்ரசாக்களும் ஊர்மக்களின் வசூல் பணத்தில்தான் இவர்களுக்குரிய சம்பளம் வழங்கி வருகிறார்கள், அரபு நாடுகள் போன்று அரச உதவிகள் கொடுப்பனவுகள் வழங்கப்படுவதில்லை,விதிவிலக்காக நகரப்புறங்களில் சிலவற்றுக்கு அசையாசொத்துகளின்ஷாமூலம் வருமானம் வரலாம்,2மத்ரசாவில் இருந்து வெளியேறும் உலமாக்கள் மத்ரசாக்களையும்,பள்ளிவாயல்களையும் தனது துறை சார்ந்த தொழில்என்ற கருத்தடிப்படையில் இவ்விடாங்களில் தொழில் புரிவதற்கு முயற்சி எடுப்பது எல்லோருக்கும் பொருத்தமற்றது .3இவ்வாறு பள்ளிகளிலும் மத்ரசாக்களிலும் உலமாக்கள் தொழில்களை அமைத்துக் கொள்ள விரும்புவதற்கான பிரதான காரணம் அதிகமான மத்ரசாக்களில் இஸ்லாம் சம்மந்தமான பாடங்கள் தவிர்ந்து தொழில் பயிற்சிகள்.சமகாலத்தில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பொதுவாக அரபு நாடுகளில் தொழில் புரிவதற்கான பாட நெறிகள் கணனி பயிற்சிகள் ,காரியாலயங்களில் வேலை செய்யக்கூடிய பாடங்கள் ,பயிற்சிகள் வழங்கப்பட்டால் ஹலாலான முறையில் அதிகமான சம்பளத்துக்கு தொழில் தேடிக்கொள்ள முடியும் அப்போது உலமாக்களுக்கு கிராக்கி அதிகரிக்கும் மதிப்பும் மரியாதையும் வழங்கப்படும் ,தேர்ந்தெடுத்து வடிகட்டி உலமாக்களை மத்ரசாக்கள் வெளியேற்றும் போது தகுதிவாய்ந்த உலமாக்கள் உருவாக்கப்படுவார்கள்,இதல்லாமல் உலமாவாக இருந்தால் பள்ளியில் அல்லது மத்ரசாவில்தான் தொழில் செய்ய வேண்டும் என்ற எழுதப்படாத சட்டமாக இலங்கையில் உள்ளது,உலமாவாக இருக்கக்கூடியவர் தனது அறிவை பயன்படுத்தி விவசாயம்,வியாபாரம்,பண்ணைகள்,காரியாலய வேலைகள் போன்றவற்றில் ஈடுபட்டால் எந்தப்பிரச்சினையும் இல்லை,இஸ்லாம் எந்தந்த தொழில்கள் எல்லாம் ஹலாலாக்கி இருக்கிறதோ அதையல்லாம் உலமாக்கள் தாராளமாக செய்யலாம்அதற்கான ஊக்குவிப்பும் பயிற்சியும் சகல மத்ரசாக்களும் மேற்கொள்ள வேண்டும் அப்போதுதான் யாருக்கும் அஞ்சாமல் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும் மன உறுதி உலமாக்களிடம் வரும்

    ReplyDelete
  8. I feel sorry for this branch of Muslim clerics we have today.. They are very much uneducated or innocent. Why can not they have some law experts with them to seekers rule of law in relation to their jobs as immams in Mosques.. by law Immams who are employed mosques or college are entitled to EPF and they can take more admins into court of law for breaching the law of conduct : first of all Imams should take their letter of employment and take them into labour ministry and fail a case any mosque.. Mosques and village people have been taking benefit out of them .... they have been used and misused as curry leaf. do not they have family to feed or children to feed?

    ReplyDelete
  9. இது பற்றி முதலில் இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையுடன் கதைத்து மேலும் இது பற்றி ஆராய்ந்து நாடாளவிய ரீதியில் பள்ளிவாயல்கள் மார்க்க நிலையங்களில் பணிபுரியும் உலமாக்கள்,முஅத்தின்மார்கள் ஏனையோர்களுக்கு குறைந்த பட்ச சம்பளம் அவர்களின் கடமைகள் உரிமைகள் பற்றி ஒரு தெளிவான சட்டம் வரையறைகளை அமைத்து செயற்படுத்தினால் மட்டும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணமுடியும். யாரையும் குறை காணுவதால் பிரச்னைகள் கடைசிவரை பிரச்சனைகளாகவே இருக்கும்.

    ReplyDelete
  10. ஒவ்வொரு முஸ்லிமும் மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞராகவே (உலமாவாகவே) இருக்கவேண்டும் என்பதையே இஸ்லாம் வலியுறுத்துகிறது.

    இவ்வாறு கற்றறிந்தோர் பள்ளிவாசல்களிலோ அன்றிப் பள்ளிக்கூடங்களிலோ பணியாற்ற விரும்பினால் அதன் நிர்வாகத்தினருடன் தமக்கான பணிகள், அதற்கான கால எல்லை, வேதனம், தமது வாழ்வாதாரத் தேவைகள்,4 இன்னாபிற அடங்கலான ஓர் சுதந்திரமான உடன்பாட்டுக்கு வரலாம். இவ்வாறான உடன்பாட்டுக்கு இணங்குவோர் அதனைப் பாதுகாப்பது அவர்களுக்கான முதற் கடமை.

    இந்த உடன்பாட்டுக்கு அப்பாற்பட்ட நேரங்களில் அவர்கள் இஸ்லாமிய சட்ட வரைவுகளுக்கு அமைய தமது பெருளாதாரத்தைத் தேடிக்கொள்ள வானமே எல்லை!

    ReplyDelete
  11. இஸ்லாமிய அடிப்படையே தகர்த்து விட்டது இந்த பதிவு.
    இஸ்லாத்தில் இல்லாத சீதனத்தொகையை ( வீடு, திருமணம்) சம்பாதிப்பதட்காகவே மார்கத்தை வளைக்கும் ஆலிம்களும் பொதுமக்களும்.
    இஸ்லாமிய மார்க்கம் எளிமையான மார்க்கம். இதை மக்களிடத்தில் கடினமாக நுழைத்தது மத்ஹப் மௌலவிமார்கள்தான்.
    நாங்களெல்லாம் முஸ்லிம் பெற்றோர்களுக்கு பிறந்ததால் முஸ்லிம்களாய் நாட்டின் சனத்தொகை கணக்கெடுப்பில் பதியப்பட்டுல்லோமே தவிர, ஒரு முஸ்லிமாய் இருப்பதற்கான தகுதி
    அறவே இலலை. முதலில் முஸ்லிகள் முஸ்லீமாக (குர்ஆன், ஹதீஸ்படி ) வாழ கற்றுகொள்ளவேண்டும்.


    1. பள்ளி நிர்வாகம் ஒருத்தர முழு நேர வேளைக்கு அமர்த்தினால் 25 000 ரூபாக்கு மேலாவது இப்போது உள்ள நிலையில் சம்பளம் கொடுக்க வேண்டும்.
    2. சரியான சம்பளம் கொடுக்கமையால்தான் இஸ்லாத்தில் இல்லாத கத்தம், பாதிஹா, மௌளூது, இப்படி இன்னும் எராளமான பித்அத்களை உருவாக்கி பணம் சம்பாதிக்க முனைந்தார்கள்.
    இப்பொது மக்களின் நிலை மார்க்கம் என்றால் என்னவென்று தெரியாமல், ஹஜரத் வந்தாதான் வண்டி ஓடும் என்ற நிலை மாறியுள்ளது.

    3. அடிக்கடி பேசக்கூடிய வார்த்தை என்னவென்றால், " மார்க்க அறிஞ்சர்கள் என்றால் கண்ணியமானவர்கள், உயர்தவர்கள், கௌரவமானவர்கள், நாளைய தலைவர்களை உருவாக்கக்கூடியவர்கள்" இப்படியெல்லாம் ஒவ்வொரு உரைகளிலும் கூறி தன்னைத்தானே பெருமைபடுதிக்கொள்வது.
    பெருமைக்குரியவன் அல்லாஹ்! எங்கையாவது நபி (ஸல்) அவர்கள் இப்படி கற்றுத்தந்திருக்கிரர்களா?
    இப்படிப்பட்டவர்கள் மத்ஹப் குப்பைகளை கற்றவர்களே!

    4. இந்த சமூகத்தில் மாற்றப்படவேண்டியதொன்றுதான் 7 வருடம் ஓதி படிச்சவர்கள்தான் மார்க்கம் சொல்ல தகுதியானவர் என்ற நிலை.
    புகாரி: 3461 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
    என்னிடமிருந்து ஒரே ஒரு (சிறு) செய்தி கிடைத்தாலும் அதை பிறருக்கு எத்திவையுங்கள்.
    இதுதான் மார்க்கம் எமக்கு கற்றுத்தந்தது.

    இந்த பதிவு ஓர் சீதன சுமையை எதிரொலிக்கின்றது. ஒவ்வொரு ஆண்களும் அல்லாஹ்விடத்தில் முஸ்லிமாக வாழ்வதற்கு
    திருமணத்தின்போது பெண்களிடத்தில் மஹர் கொடுத்து, பரகத் நிறைந்த திருமணமான எழிய (செலவு குறைந்த) திருமணத்தை நடாத்த முன்வரவேண்டும். இதுவே எம்மை சுவர்கத்தின்பால் அழைத்துச்செல்லும்.



    ReplyDelete
  12. நல்ல பகடி யாரும் பணம் சம்பாதிப்பதில் யாருக்கும் கோபம் இல்ல இஸ்லாமிய பொயர்வ பொத்திக்கொண்டு மக்கள் ஏமாற்றி சம்பாதிப்பதை நினைத்தால் தான் கோபம்

    நீங்கள் என்ன முறையில் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று தெளிவு படுத்த முடியுமா

    நீங்கள் எந்த திறமையையே முதலீடு தேய்த்து சமாதிக்கீர்கள் என்று சொல்ல முடியுமா

    எளிய மக்களின் போட்டோவை அரபு நாடுகளில் காட்டி வசூல் பண்ணி அதில் சுகம் அனுபவிக்கிறீர்கள்

    வெக்க கேடு ஒரு மௌலவி அண்மையில் கிணறு காட்டும் வேலையில் ஒரு இந்து சகோதரிக்கு அபாய உடுத்தி போட்டோ பிடித்து இருக்கார்

    இன்னொரு நிறுவனம் கட்டி கொடுத்த கிண்ணத்தை புதிய பெயர் இட்டு குடும்பமத்துக்கு 5000 கொடுத்து அவர் 45000 பில் போடுகின்றார் இதுதான் அவர்கள் பணம் சம்பாதிக்கும் லட்சணமா?

    ஆதரவத்த ஏழை பிள்ளைகளுக்கு IIRO கொடுக்கும் பணத்திற்கு கொமிசன் எடுப்பதுதான் மௌலவி மார் பணம் சம்பாதிக்கும் லட்சணமா ?

    அதற்கு ஆதாரம் வேறு மார்கத்தில் இருந்து சொல்லுவதற்கு முயற்சி செய்வது அதை விட கேவலம்

    ReplyDelete
  13. People, in general, tend to project onto others their own state of mind. Well-meaning people inevitably assume other people are well meaning. People who CHEAT assume everyone cheats. People who deceive assume everybody deceives.

    ReplyDelete
  14. Aarambame kulappamaahavum pilayaahavum ullathe..Rashadee..!!
    Unmayana da'wa seyyum..uttamargalai yaarume pilayaha ninaikka maattargale....
    Neengal islaathai padippathu ulaikkattan enral athu romba asuttam......Ippadiyaana ularalhalathaan makkal ungal pechukkalaum theerppugalaum purakkanikkuraargalo....???

    ReplyDelete
  15. It's waste to reply to his articles. Most of the time JM doesn't publish our comments to sheikku TM's articles. Hope this will get punished.

    ReplyDelete
    Replies
    1. Correction - published not punished

      Delete
  16. احسنت يا صديقي ندعوا الله ان يؤيد عملك هذا بمرضاته وكشفت دموع العلماء واقتصاداتهم فلا تلتفت علي من بظهرك واثبت قلمك علي ما بكذا

    ReplyDelete
  17. Abdul Cader Mohamadu Haris ,

    Your concern is quite understandable but the freedom of
    expression and the love for money is universal for
    everyone including the clerics . Money Money Money and
    that is the honey in life ! Ulemmas have become Ulemmas
    not by intention but by necessity and if there were any
    other alternatives they would have embraced them more
    passionately . Do some research , you will find the truth.
    Nothing worthier than the truth .

    ReplyDelete
  18. Ashsheikh TM has lost patience with his society , not
    only with mosque admins . It is the society that pays
    them and not out of admin's pocket . He decided to say
    it on the social media so that everyone knows their
    real situation . Nobody needs to find fault with him.
    His frustration is an eye opener and that is why I raised
    six of my questions . Freedom of expression and platforms
    for it are more powerful today than never before . All we
    can do is , facing them with facts .Nothing but facts .
    ALL RELIGIONS ARE A BUSINESS TODAY . This is the fact that
    is coming out of this Sheikh ! This is my opinion and it is
    open for anyone to challenge !

    ReplyDelete
  19. Hi,

    Nothing wrong in this article at all. Ulamas doesn't mean restrict them self into masjid and conduct five time priors, running kids madrasa and also conducting janaza/nikah functions. They are the people like us, more rightly superior than us in the knowledge of islam.
    Its mandatory for them to earn and live their normal life like others. Why do we restrict them to the four doors of masjid even if they have ample time to utilize it for betterment of livelihood of themselves and their family after fulfilling their duties.

    This should be discussed/exposed to the society rather keeping it as an inside matter. In our country still we treat ulamas in a backward manner and ulamas also not thinking out of the box to meet the world in Islamic perspective.

    In a nut shell they should allow what ever they are capable to with the frame of islam while they fully discharge their due diligence.

    Salam.
    Islam is not a religion but a way to succeed here and here after.

    ReplyDelete
  20. Writer intends to discuss a Valid and most important point & the subject matter ... But unfortunately it was not discussed direct to the point. I personally see by dragging unnecessary matters in to the subject matter undermines the point he tries to highlight.


    ReplyDelete
    Replies
    1. Please try to download a 'Tamil keyboard' and place here your openions in Tamil, so that readers will understand well and you will get more suggestions related this important point.

      Delete
  21. I tried to work with a Tamil keyboard and didn't manage it.
    I love to make my point in Tamil but have trouble with the
    Tamil keyboard . I will try it again if I get a good one .

    ReplyDelete

Powered by Blogger.