"பாகிஸ்தான் நரகம் அல்ல" - இந்திய நடிகைக்கு வலுக்கிறது எதிர்ப்பு
அண்டை நாடான பாகிஸ்தானைப் பற்றிய நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தற்கு தேசதுரோக வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையிலும், தனது கருத்தை மாற்றிக் கொள்ளவோ, மன்னிப்பு கேட்கவோ முடியாது என கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான திவ்யா ஸ்பந்தனா தெரிவித்துள்ளார்.
அவரின் திரைப்பெயர் ரம்யா; இஸ்லாமாபாத்திற்கு விஜயம் செய்த பின், 'பாகிஸ்தான் நரகம் அல்ல, அங்குள்ள மக்களும் நம்மைப் போன்றவர்கள்தான்’ என்று கருத்துத் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானை நரகத்துடன் ஒப்பிட்ட இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரின் கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக இவ்வாறு தெரிவித்திருந்தார்.
அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் உள்ள வழக்கறிஞர் ஒருவர் அவரின் கருத்து திகைக்க வைக்கும் அளவிற்கு உள்ளதாகவும், அவர் மீது தேசதுரோக குற்றத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது ஒன்றும் புதிய செய்தி அல்லவே.
ReplyDeleteகடந்த 10 வருடங்களுக்கு மேலாக பாக்கிஸ்தானுக்கு கிரிக்கெட் விளையாடக்கூட ஒருவரும் போவதில்லை, இலங்கை உட்பட.
ஏனெனில் அங்கு ஜனநாயகம் இல்லை. அடிக்கடி ராணுவ புரட்சி நடக்கும். குண்டுகள் வெடிக்கும், அரசாங்கமே பயங்கரவாத்தை ஊக்குவிக்கும்.
இந்தியாவில் ஜனநாயகம் இருக்கின்றதா Antonyraj?
Deleteபடித்தவனுக்கே காசு கட்டாமல் வேலை கிடைப்பதில்லை,
சாதி விகிதாசார அடிப்படையில்தான் எல்லாம்.
Maoist Terrorist,
Red light district is a no go zone.
Politicians are the thugs ( this is almost in every country )
இது ஒன்றும் உங்களுக்கு தெரியாமல் இல்லை. முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்க்கின்றீர்களா?
உங்கள் மேலத்தை வேறு எங்காவது கொட்டுங்கள்.
Mr Ajan. ...u go to Pakistan see the situation and report.... otherwise don't speak from heresay. ..
ReplyDelete