Header Ads



அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள, வர்த்தகரின் படுகொலை


கொழும்பு , பம்­ப­லப்­பிட்டி - பகு­தியில்  சில தினங்­க­ளுக்கு முன்னர் கடத்­தப்­பட்ட இளம் முஸ்லிம் வர்த்­தகர் மொஹமட் சகீப் சுலை­மான  மாவ­னெல்ல பகு­தியில் நேற்று முன்­தினம் சட­ல­மாக மீட்­கப்­பட்­டுள்ளார்.    

கடத்­தப்­பட்ட வர்த்­த­கரை விடு­விக்க இரண்டு  கோடி ரூபா கப்பம் கடத்­தல்­கா­ரர்­களால் கோரப்­பட்­ட­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.   கடத்­தப்­பட்ட வர்த்­த­கரின் தந்­தைக்கு கடந்த செவ்­வாய்க்­கி­ழமை தொலை­பே­சியில் அழைத்த மர்ம நபர் ஒருவர் இந்த கப்பத் தொகையை கோரி­யுள்­ள­தாக  தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.  

இந்­நி­லையில் வர்த்­தகர் சகீப் சுலை­மானை மீட்­கவும், கடத்தல்காரர்­களை அடை­யாளம் காணவும் பொலிஸார் பொது மக்­களின் உத­வியை நாடி­யி­ருந்­தனர்.  குறிப்­பாக ஏழு விசேட பொலிஸ் குழுக்கள் இந்த கடத்தல் சம்­பவம் தொடர்பில் தீவிர விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­தி­ருந்த நிலை­யி­லேயே தற்­போது  அவ­ரது சடலம் மீட்­கப்­பட்­டுள்­ளது.  

சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் இதே பம்­ப­லப்­பிட்­டியைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்­த­க­ரான முஹமட் ஷியாம் கடத்­தப்­பட்டு இவ்­வாறே படு­கொலை செய்­யப்­பட்டார்.

வர்த்­தக கொடுக்கல் வாங்கல் தொடர்பில் அவ­ரது நெருங்­கிய நண்­ப­ரா­லேயே இக் கொலை அரங்­கேற்­றப்­பட்­டி­ருந்­தது. இக் கொலையை குத்­தகை அடிப்­ப­டையில் செய்த குற்­றச்­சாட்டில் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் ஒரு­வரும் அவ­ரது மகனும் மேலும் பலரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்­தனர்.

இன்று இதே­ போன்று மற்­றொரு இளம் முஸ்லிம் வர்த்­தகர் கடத்திக் கொலை செய்­யப்­பட்­டுள்­ளமை கவ­லைக்­கு­ரி­ய­தாகும். இக் கொலைக்கும் பணக் கொடுக்கல் வாங்கல் விவ­கா­ரமே கார­ண­மாக இருக்­கலாம் என பொலிசார் சந்­தே­கிக்­கின்­றனர்.

முஸ்லிம் சமூகத்தில் இவ்வாறான கொலைகள் இடம்பெறுவது கவலைக்கும் கண்டனத்துக்குமுரியதாகும். இஸ்லாம் வியாபாரத்தை ஹலாலாக்கியிருப்பினும் கொடுக்கல் வாங்கல்களை உரிய நிபந்தனைக ளின் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றே பணிக்கிறது. ஒருவரது ஒரு சதத்தைக் கூட மற்றவர் அநியாயமாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்றே வலியுறுத்துகிறது. துரதிஷ்டவசமாக பணத்திற்காகவும் பேராசைக்காகவும் இவ்வாறு அநியாயமாகவும் கொடூரமாகவும் வர்த்தகர்கள் கொலை செய்யப்படுவது மிக மோசமான பாவ காரியமாகும்.

வர்த்­த­கர்கள் மத்­தியில் கொடுக்கல் வாங்­கல்கள் மற்றும் ஏனைய விவ­கா­ரங்கள்  தொடர்பில் பல்­வேறு முரண்­பா­டுகள் தகராறுகள் இருக்கலாம். அவை   உரிய  முறைமைகளை பின்பற்றி தீர்க்கப்படவேண்டும்.  

அதற்கு மாறாக எவ்வாறான வகையிலும் சட்டத்தையும் மீறும் ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இடமளிக்கக்கூடாது. 

எது எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த கடத்தல் மற்றும் படு­கொலை சம்­பவம்  தொடர்பில்  சட்டம் ஒழுங்கை அமுல்­ப­டுத்தும் நிறு­வ­னங்கள் விரை­வா­கவும்  உரிய முறை­யிலும் விசா­ரணை நடத்தி உண்­மையை கண்­ட­றிந்து  குற்­ற­வா­ளி­களை சட்­டத்தின் முன் நிறுத்­த­வேண்டும்.  

எந்­த­வ­கை­யிலும்  இது­போன்­ற­தொரு சம்­பவம்  இனி­வரும் காலங்­களில் இடம்­பெ­றாமல் இருக்கும் வகையில் சட்டம் ஒழுங்கு அமுல்­ப­டுத்­தப்­ப­ட­ வேண்டும். 

இன்று விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம்..!

3 comments:

  1. It shows what happens to our moralocal. Standard.
    It is done with agent killers...
    Sri Lanka intelligence services should trace them and punish them now..it will send a good lesson to all

    ReplyDelete
  2. Not a single Muslim has become wealthy following the rules of
    Islam but all are trying to be good Muslim to maintain their
    wealth after becoming rich breaking all rules. Nevertheless
    these murders are worrying . PM has intervened to speed up
    investigations and that is a good sign . Bad political
    climate has not properly started to settle . Businessmen
    need to be on high alert about their business contacts and
    their credibility. We are living in a society that will do
    anything to anybody for money and out of jealousy. Criminals
    have no religion .

    ReplyDelete
  3. Islamic law and penalties are sole & stand-alone solution for the crimes. Thus the death penalty must be enforced forthwith to hang all the culprits who commit the murder. Until such this country is in pitfall and away from blessing.

    ReplyDelete

Powered by Blogger.