மகளை கண்டித்தார் மைத்திரி
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதல்வியான சத்துரிக்கா சிறிசேன, கல்வியமைச்சை தொடர்பு கொண்டு பொலனறுவை ரோயல் கல்லூரியின் சேவையாற்றி வரும் இரண்டு பிரதி அதிபர்கள், மிகவும் பிரச்சினைக்குரியவர்கள் எனக் கூறி, அவர்களை இடமாற்றம் செய்யுமாறு அறிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் புதல்வியின் உத்தரவுக்கு அமைய செயற்பட்ட கல்வி அதிகாரிகள், பிரதி அதிபர்களை இடமாற்றும் யோசனையை கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசத்திடம் முன்வைத்துள்ளனர்.
ஜனாதிபதியின் புதல்வியின் கோரிக்கை என்பதால், மேலதிகமாக யோசிக்காத அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இடமாற்றம் செய்யும் யோசனைக்கு அனுமதி வழங்கி, அவர்களை மின்னேரிய தேசிய பாடசாலைக்கு அனுப்பியுள்ளார்.
திடீரென தாம் இடமாற்றம் செய்யப்பட்டதால், குழப்பமடைந்த பிரதி அதிபர்கள், நேரம் ஒன்றை ஒதுக்கி தமது கிராமத்து தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து தமது நேர்ந்த அநீதியை கூறியுள்ளனர்.
தனக்கு தெரியாமல், தனது கிராமத்து பாடசாலையின் பிரதி அதிபர்களை இடமாற்றம் செய்தமையால் கோபமுற்ற ஜனாதிபதி, கல்வியமைச்சின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கடுமையாக சாடியுள்ளதுடன் இப்படியான ஒருதலைப்பட்சமான இடமாற்றங்களை செய்ய வேண்டாம் என எச்சரித்துள்ளார்.
இதனையடுத்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பிரதி அதிபர்களின் இடமாற்றம் இரத்துச் செய்யப்பட்டதுடன் மீண்டும் ரோயல் கல்லூரிக்கு நியமனத்தை வழங்கி உத்தரவிட்டுள்ளனர்.
மகளின் கோரிக்கை நிறைவேற்ற சென்று தந்தையிடம் திட்டு வாங்கிய அதிகாரிகளுக்கு மாத்திரமல்லாது, இடமாற்றத்தை மீண்டும் இரத்து செய்ய அனுமதியை வழங்க வேண்டிய கல்வியமைச்சருக்கும் தலைசுற்றி போனதாக கல்வியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
""" WELLDONE """" நாம் எதிர்பார்ப்பது இதையே
ReplyDeleteThis is yahapalanaya
ReplyDeleteGood
ReplyDelete