Header Ads



முஸ்லிம்களுக்கு நிர்வாக, அதிகார சபை - விக்கினேஸ்வரன்

முஸ்லிம்களுக்கு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழர்களுக்கு ஆட்சேபணை இருக்க முடியாது என்கிறார் விக்கி  

கிழக்கில் பெருவாரியாக வெளியார் குடியேற்றங்கள் நடைபெற்ற போது தமது குரல் கொடுத்திருக்கலாம். இவ்வாறான குடியேற்றங்களைக் குறைத்திருக்கலாம். இக் குடியேற்றங்களினால் எமக்கு ஏற்பட்ட பாதிப்பை நாங்கள் தணிப்பது என்றால் வடகிழக்கு இணைப்பு அவசியம். முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது என்று வடக்கு முதல்வரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான  சி.வி. விக்கினேஸ்வரன் தெரிவித்தார். 

ஆனால் வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான ஒன்றாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

8 comments:

  1. Better settle the muslims in the north (expelled by ltte)first,then we thing about the rest.

    ReplyDelete
  2. முஸ்லிம்களே நம்பாதீர். இதுவெல்லாம் காற்றில் பறக்க போகும் வாக்குறுதிகள்

    ReplyDelete
  3. பதவி கிடைக்கும் என்கின்ற ஆசையில் எங்கட மாங்கா மடைய அரசியல்வாதிகள் இவரின் சதிவலையில் விழுந்தாலும் விழுவார்கள்.

    ReplyDelete
  4. வடகிழக்கை இணைப்பதன் மூலம் மீண்டும் முஸ்லிம்களை கருவறுக்க நினைக்கின்ற தமிழர்தரப்பையும் வடமாகான முதலமைச்சரையும் நாங்கள் கடுமையாக கண்டிக்க வேண்டும். விடுதலைப் புலிகளென்ற தமிழர் தரப்பு 1990 ஆம் ஆண்டு துரத்தியடித்த வடமாகான முஸ்லிம்களை மீண்டும் அவர்களுடைய சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு கொஞ்சமும் நெஞ்சில் இடமில்லாத வடமாகாண முதலமைச்சர் அன்மையில் அங்கு வழங்கப் பட்ட பட்டதாரி நியமணத்தில் கூட முஸ்லிம்களுக்கு சரியான பங்கீடு இல்லாமல் புறக்கனித்திருப்பதானது ஒரேமாகாணத்தில் உள்ள முஸ்லிம்களை ஒரு பொறுட்டாகக் கொள்ள வில்லை என்பது புலனாகின்றது. வடக்கையும் கிழக்கையும் இணைத்து முஸ்லிம்களையும் வாழ வழியமைப்போம் என்று கூறுகின்ற சம்மந்தன் ஐயா அவர்களும் விக்னேஸ்வரன் ஐயா அவர்களும் மீண்டும் முஸ்லிம்களை புறக்கனிக்க மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் தரப்போகின்றார்கள். இவர்களின் நடவடிக்கை ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதையாய் உள்ளது . இது போதாக்குறைக்கு புதிய அரசியல் யாப்பு உருவாக்கத்தில் இனப்பிரச்சினைக்கு தீர்வாக மாகாணங்களுக்கும் அதிகாரப் பரவலாக்கம் செய்யப்போகின்றார்கள். இங்குதான் முஸ்லிம்களின் நிலமை கேள்விக்குறியாக்கப் படும்.

    ReplyDelete
  5. Just Shut. You have no position to utter this butter. Hearing this makes me vomitting.

    ReplyDelete
  6. Dear Hon Vigneswaran,

    You expect the Muslims to agree for the merged North-East Province and to live together while the Tamil community in the Ampara District deadly opposing for a Muslim majority coastal District in Ampara and they do not want to live together. Do you think that the equationm is still balanced?

    ReplyDelete
  7. Sir, Each community has its own degnity, self identity,self respect and so on.Respect other communities' bargains with tolerance. Change your spectacles. Let's unite as Sri lankans with equal separation. We all want only peaceful country.

    ReplyDelete

Powered by Blogger.