Header Ads



"புகழ் சேர்க்கும் முஸ்லிம், பாடாசாலைகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்"

-Safwan Basheer-

உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த ஒரு மாணவனை வீதியில் சந்தித்தேன்.

பரீட்சையைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கும்பொழுது எனக்கு இந்த முறை 
எக்சாம் செய்ரதுல திருப்தியே இல்ல நாநா என்றான்.

ஏன் தம்பி என்ன பிரச்சினை என்று கேட்டேன்.

இல்ல நாநா ஆறுமாதங்கள் விஞ்ஞானப் பிரிவில் படித்துவிட்டு, திரும்ப வனிகப் பிரிவில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம் அதனால் இம்முறை என்னால் சரியாக பரீட்ச்சை எழுதமுடியவில்லை நாநா  என்றான்.

பின்னர் அந்த மாணவன் விஞ்ஞானப்பிரிவில் இருந்து வனிகப் பிரிவிற்கு மாரியதற்கான காரணம் செலவுகளை சமாளிக்க முடியாமை என்று அறியமுடிந்தது.

ஓ. எல் முடிந்ததும் கொஞ்சம் நல்ல பெருபேறுகளை பெரும் மாணவர்கள் விஞ்ஞானம்,கணிதம் என்று நகர்ப்புர பாடசாலைகளுக்கு செல்வதும் இடையில் ஊர் பாடசாலைக்கு திரும்பி வருவதும் முஸ்லிம் கிரமாங்களில் வாடிக்கையாக நடக்கும் விடயமாகிவிட்டது.

இன்று நகர்ப்புரங்களில் இருக்கும்  முஸ்லிம் தேசிய பாடசாலைகள் உயர்தரத்துக்கு சுற்று வட்டத்தில் இருக்கும் திறமையான மாணவர்களை  உள்வாங்கிக் கொள்கிறார்கள்.

ஆனால் அந்த மாணவர்கள் டியுஷன் மூலம்தான் படிக்க வேண்டும்.

அவர்ளது பாடாசாலை மூலம் பரீட்சை எழுத அம்மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதைத்தவிர இந்த தேசிய பாடசாலைகள் ஒன்றும் செய்வதில்லை.

இந்த நகர்ப்புர பாடாலைகளின் உயர்தர வகுப்புகள் செயழிலந்து கிடப்பதால்,
அதன் மூலம் உச்ச பயனை அடைவது உயர்தர வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுக்கும் ஆசிரியர்கள்தான்.

இந்த டியூஷன் செலவுகளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மீண்டும் ஊர்ப்பாடசாலைக்கு வந்து தனக்கு பொருத்தமில்லாத துறையில் படிக்கும் நிர்ப்பந்தத்துக்கு உள்ளாகும் நிறைய மாணவர்கள் இருக்கிறார்கள்.

அடுத்து எமது சமூகத்தில் கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும்பொழுது முதன்மை படுத்துவது பல்கலைக்கழக மாணவர்களைத்தான்.

தூதரகங்கள், இஸ்லாமிய தொண்டு நிறுவனங்கள் எல்லோரும் ஸ்கொலசிப் வழங்குவது பல்கைக்கழக மாணவர்களுக்குதான்.

ஆனால் உயர்தரத்தில் தனக்கு விரும்பிய துறையில் படிக்க பொருளாதார வசதி இல்லாததால் ஊரில் இருக்கும் பாாசலையில் கலைப்பிரிவில் படித்துவிட்டு கட்டாருக்கு சென்றால் போதும் என்று தனது கனவுகளை ஒரு வட்டத்துக்குள் சுருக்கிக் கொள்ளும் இளைஞர்கள் குறித்து தனவந்தர்களும், கல்விக்கு உதவி செய்யும் தொண்டு நிறுவனங்களும் கட்டாயம் கவனத்தில்
கொள்ள வேண்டும்.

அதேபோல் மாவட்டத்தில் இருக்கும் திறமையான மாணவர்கள் எல்லோரையும் வலைத்துப்பிடித்து தமது பாடசாலை மூலம் பரீட்சை எழுத
அனுமதி வழங்கிவி்ட்டு, அந்த மாணவர்களின் கல்விக்கு எந்தப் பங்களிப்பையும் வழங்காமல் பாடசாலை நேரத்திலும் டியூஷன் போக அனுமதிவழங்கிவிட்டு, அம்மாணவர்களின் பெறுபேருகளைவைத்து பாடசாலைக்கு புகழ் சேர்க்கும் முஸ்லிம் பாடாசாலைகள்  குறித்து சமூகம் அவதானமாக இருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.