Header Ads



ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்கு நேர்ந்த கதி - நஷ்டஈடு வழங்கப்படுமென அறிவிப்பு

ஜேர்மனி Frankfurt விமான நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட விமானம் ஒன்று 15 மணித்தியால தாமதத்தின் பின்னர் கட்டுநாயக்கவை வந்தடைந்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயார்லைன் நிறுவனத்திற்கு சொந்தமான UL554 என்ற விமானம் 15 மணித்தியாலங்கள் தாமதமாக வருகை தந்ததாக இலங்கை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

விமானப் பணிக்குழு உறுப்பினர் ஒருவர் தாமதமாக வருகை தந்தமையினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

Frankfurt விமான நிலையத்திலிருந்து நேற்று வெள்ளிக்கிழமை காலை விமானம் புறப்பட்டிருக்க வேண்டும். ஆனால் விமானப் பணிக்குழு உறுப்பினரின் தாமதம் காரணமாக இந்த விமானம் இன்று காலை வரையிலும்

விமான நிலையத்திலேயே நின்றுள்ளது. இதன் காரணமாக பயணிகள் பாதிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய விதிமுறைகளுக்கு அமைய பயணிகளுக்கான நஸ்டஈடு வழங்கப்படும் என்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன் விமான செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் Frankfurt விமான நிலையம் இரவு வேளைகளில் மூடப்பட்டிருக்கும் என்பதால் இன்று காலை விமான நிலையம் திறக்கப்பட்டதை அடுத்தே விமானம் கொழும்பை நோக்கி புறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. The same happened in Qatar in April 2014, but did not give anyone the right answer,delayed one day. For anyone who did not give compensation.

    ReplyDelete

Powered by Blogger.