பான் கீ மூனின் இலங்கைக்கான விஜயம், கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் - மஹிந்த
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் இலங்கைக்கான இம்முறை விஜயம் கடும் நெருக்கடியை ஏற்படுத்தும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலத்திலும் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்தபோதிலும் பான் கீ மூன் உள்ளிட்ட சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு தான் அடிபணியாததால் நாடு நெருக்க டிகளை எதிர்நோக்கவில்லை என்று பெருமை பாராட்டியுள்ள மஹிந்த, தற்போதைய நிலை அவ்வாறு இல்லை என்றும் குறிப்பிட்டார்.
ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூன் அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள விருக்கும் நிலையிலேயே மஹிந்த ராஜபக்ச இதனைத் தெரிவித்தார்.
கொழும்பை அண்மித்த மஹரகம – பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று வெள்ளிக்கி ழமை மாலை விஜயம் செய்த மஹிந்த ராஜபக்ச அங்கு இடம்பெற்ற மத வழிபாட்டிலும் கலந்துகொண்டார்.
இதன் பின்னர் விகாரையிலிருந்து திரும்பிய மஹிந்த ராஜபக்ச பான் கீ மூனின் இலங்கை க்கான விஜயம் தொடர்பாக கருத்து வெளியிட்டார்.
“பான் கீ மூன் உள்ளிட்டோர் இன்றும் வர முடியும். அவர்கள் நான் ஆட்சியிலிருந்த காலத்திலும் வந்தார்கள். இன்றும் வருகிறார்கள். ஆனால் ஒரு வித்தியாசம் உள்ளது. நான் ஆட்சிசெய்த காலத்தில் வந்ததுபோல அல்ல. இன்று மாறுபட்ட சூழ்நிலையிலேயே இன்று அவர்கள் வருகிறார்கள். மனித உரிமைகளை அரசாங்கம் பாதுகாக்கின்றதா, இல்லையா என்பது தொடர்பாக மக்கள் அறிவார்கள். மக்களே இன்று அதனை கண்கூடாக பார்க்கின்றார்கள் தானே” – என்றார்.
Post a Comment