"முஸ்லிம்கள் மத்தியில், தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியம்"
புர்கா அல்லது நிகாப் தடை யோசனை
-நேற்றைய விடிவெள்ளி பத்திரிகையில் வெளியாகியிருந்த ஆசிரியர் தலையங்கம்-
முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா அல்லது நிகாப் எனப்படும் முகம் உட்பட உடலை முழுமையாக மறைக்கும் ஆடைக்கு தடை விதிக்க வேண்டும் எனும் புலனாய்வுப் பிரவினரின் யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உடனடியாகவே நிராகரித்திருப்பது வரவேற்புக்குரியதாகும்.
தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்திலேயே இந்த யோசனை புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியால் முன்மொழியப்பட்டுள்ளது.
எனினும் முஸ்லிம் மக்களை பாதிக்கும் வகையிலான தீர்மானங்களை மேற்கொள்ளவோ அவற்றை நடைமுறைப்படுத்தவோ முடியாது என்பதை பிரதமர் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் தெள்ளத் தெளிவாகவே சுட்டிக்காட்டியிருக்கிறார்.
புர்கா அல்லது நிகாப் ஆடையானது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிரூபிக்கப்படவில்லை.
கண்டியில் வங்கிக் கொள்ளைக்கு முயன்ற சந்தர்ப்பத்தை தவிர, பெருவாரியான முறையில் குறித்த ஆடையை குற்றச்செயல்களுக்கு பயன்படுத்துவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதிவாகியிருக்கவில்லை.
அவ்வாறான நிலையில் புலனாய்வுப் பிரிவினர் இந்த ஆடையை தடை செய்ய வேண்டும் எனக் கோரியமையானது ஏதேனும் அரசியல் உள்நோக்கம் கொண்டதா எனும் சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
மேற்கில் பாரிய தீவிரவாத அச்சுறுத்தல்களைச் சந்தித்துள்ள நாடுகள் கூட புர்கா, நிகாப் ஆடைகளுக்கு தடைவிதிக்காத நிலையில், இலங்கையில் கடந்த போர் காலத்தில் கூட இந்த ஆடைகள் அணிவதற்கு அனுமதியளிக்கப்பட்ட நிலையில் அவசர அவசரமாக இவ்வாறானதொரு தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டும் என புலனாய்வு தரப்பினர் வலியுறுத்துவதானது பலத்த சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது.
பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி இந்த ஆடைக்குத் தடை விதித்தால் அதன் மூலம் அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம் மக்களை திசை திருப்பி அதன் பிரதிபலிப்பை எதிர்க் கட்சிகள் தேர்தல்களில் அறுவடை செய்யலாம் எனும் நோக்கமும் இதன் பின்னணியில் இருக்கக் கூடும் எனும் சந்தேகம் எழுகிறது.
எனினும் இந்த யோசனையை பரிசீலனைக்குக் கூட எடுக்காது எடுத்த எடுப்பிலேயே பிரதமர் நிராகரித்துள்ளமையானது அவர் இலங்கை முஸ்லிம்களுக்குச் செய்துள்ள கைமாறே அன்றி வேறில்லை எனலாம்.
கடந்த ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் தமது ஐக்கிய தேசிய முன்னணிக்கு அளித்த பலத்த ஆதரவைக் கருத்திற் கொண்டும் அந்த ஆதரவை குலைத்து முஸ்லிம்கள் மத்தியில் அரசாங்கத்தின் மீதிருக்கும் நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தவும் இந்த யோசனை முன்வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் பலரும் குறிப்பிட்டுக்காட்டுகின்றனர்.
எது எப்படியிருப்பினும் இந்த விடயத்தில் பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் நிதானமான நிலைப்பாடு பாராட்டுக்குரியதாகும்.
எனினும் புர்கா, நிகாப் ஆடை விடயத்தில் முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு கடப்பாடு உண்டென்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இந்த ஆடை தொடர்பான தெளிவான இஸ்லாமிய நிலைப்பாட்டை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தெளிவுபடுத்த வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தில் ஒரு சாரார் இந்த ஆடைக்கு ஆதரவாகவும் மறுசாரார் எதிராகவும் மக்கள் மத்தியில் கருத்தபிப்பிராயத்தை தோற்றுவித்துவருகின்றனர்.
நடைமுறையில் இந்த ஆடை பல்வேறு சர்ச்சைகளுக்கும் தப்பபிப்பிராயத்திற்கும் வித்திட்டுள்ளது என்பதையும் நாம் அறிவோம். முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்கு சக்திகள் ஏற்கனவே இந்த ஆடை விடயத்தை தூக்கிப்பிடித்துள்ளன.
எனவேதான் முஸ்லிம்கள் மத்தியில் ஒரு தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இந்த ஆடை விவகாரம் தோற்றுவித்துள்ளது.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.
This time prime minister has helped calm the unpredicted scnario but our leadership ( the group of islamic scientists ) has a responsibility to clatify the matter in view of quran and sunnah and guide the Ummah in timely manner before the issue stars to boil without leaving it to next generation.
ReplyDeleteThe leadership while acts as prospectors taking into consideration of global perspective in this subject, we as followers have a responsibility to abide by their verdict in this matter without differentiation among us.
Let us pray may Allah almighty sterngthen us in all aspects.
பெண்கள் முகத்தை மறைப்பது இஸ்லாமிய நெறிமுறை (சட்டம்) அல்ல - அது தவறான சிந்தனை - ஜம்மிய்யதுல் உலமா சபை (ACJU) திட்டவட்டம்
ReplyDelete++++++++++++++++++++++
★பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்பது இஸ்லாமிய நெறிமுறை (சட்டம்) அல்ல.
★பெண்கள் முகத்தை மறைப்பது என்பது தவறான சிந்தனை
★பெண்கள் முகத்தை மறைப்பது Optinal - விரும்பினால் அணிந்து கொள்ளலாம்.
★மார்க்கம் என்று முகத்தை மறைப்பது தேவையல்ல - இது தவறான சிந்தனை.
முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது, அது இஸ்லாமிய சட்டமல்ல,
முகத்தை மறைப்பது நபிகளாரின் மனைவியருக்கு மாத்திரம் உரிய சட்டம்.
இந்நிலையில் கடந்த 20.07.2016 ம் திகதியன்று தெரன TV யின் அளுத் பார்லிமன்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிரதிநிதி Maulavi .தஹ்லான் அவர்கள்
வீடியோவை பார்க்க,,,
https://www.facebook.com/thowheeddawah/videos/1216861948366755/. Jammiathul Ulama should clarify this. Allah knows best.
fantastic peace mashaallah keep it up
Delete★பெண்கள் முகத்தை மறைப்பது Optinal - விரும்பினால் அணிந்து கொள்ளலாம்.
ReplyDeleteஇந்நிலையில் கடந்த 20.07.2016 ம் திகதியன்று தெரன TV யின் அளுth பார்லிமன்ட் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமாவின் பிரதிநிதி Maulavi .தஹ்லான் அவர்கள்
வீடியோவை பார்க்க,,,
https://www.facebook.com/thowheeddawah/videos/1216861948366755/. Jammiathul Ulama should clarify this. Allah knows best.
sinna visayatha ningaleye oothi oothi perusaki vidunga
ReplyDeleteIf the lady covers her face. It is not a big issue. She is doing on her own free will and let's respect that. As to those who don't cover the face too, it's ok. There are ulemas who say covering of face not necessary. There are ulemas who say should cover the face. A majority of ulemas say that covering not necessary but if a lady wishes to cover it's her choice and it is not against Islam.
ReplyDeleteஇதுபோன்ற சர்ச்சைக்குரிய பல விடயங்களில் உலமா சபை மௌனம் காப்பது மிகவும் வருந்தத்தக்கது.அண்மையில் நான் jaffnamuslim ஊடாக இது போன்ற சில விடயங்கள் குறித்து உலமா சபைக்கு எழுதி இருந்தேன் ஆனால் அது பிரசுரிக்கப்படவில்லை.அதை இங்கு பதிவிடுகிறேன். AM.JAWFER .JP
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்.....
jaffnajaffnamuslim jaffnamuslimஜப்னா முஸ்லிம் ஊடகம் ஊடாக....
acju ACJUஅகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை செயலாளர் al அஸ்ஷேக்
முபாரக் மௌலவி அவர்களுக்கு.
கடந்த காலங்களில் அ இ ஜ உ சபையால் கூட்டு துஆ இல்லை என்று பத்வா வழங்கப்பட்டு பல ஊடகங்கிளில் பரப்பப்Pபட்டுக்கொண்டு இருக்கிறது.இது போன்று திடல் தொழுகையும் ரசூளுல்லாவின் சுன்னாஹ் என்றும் பத்வா கொடுக்கப்பட்டு அறிக்கைகளும் விடப்பட்டு பொது மக்களை சென்றடைந்த துள்ளதை தாங்கள் அறிவீர்கள்.ஆனால் அதை நடை முறைப்படுத்த அ இ ஜ உ சபையின் கிளைகளான கிராமப்புற உலமா சபைகள் முன் வராமலும் அதனை நடை முறைப்படுத்த முயற்சி எடுக்கும் பொது மக்களையும் கடுமையான எதிர்ப்பை காட்டி தடை செய்யும் காட்சிகளை நாங்கள் சந்திக்கின்றோம் ஆனால் கொழும்பில் தலைமை காரியாலயத்தில் இருந்து கொண்டு அறிக்கை மட்டும் விடும் உங்களுக்கு எந்தவிதமான எதிர்ப்போ பிரச்சினைகளோ பிரிவினைகளோ வருவதும் இல்லை.அதன் தாக்கங்களும் குடும்ப உறவுகள் பிருந்து போவதால் எந்தப்பாதிப்பையும் நீங்கள் அனுபவிக்க எந்த வாய்ப்பும் இல்லை.இதற்கான ஒரே காரணம் நீங்கள் வழங்கும் பத்வாவை கொடுத்துவிட்டு கண்டிப்பாக எல்லா ஜம்மியாவின் கிளைகளும் பள்ளிவால்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கண்டிப்பான அறிக்கையை விடுவதில் நீங்கள் கோட்டை விடுவதால் மக்கள் மத்தியில் குழப்பத்தை உண்டுபண்ணும் விதமாகவே உங்களின் பத்வாக்கள் அமைகின்றது.
பல வருடங்களுக்கு முன் நீங்கள் கூட்டு துஆ இல்லை என்ற பத்வா இன்னும் பொது இணைய தளங்களில் சுற்றிச்சுற்றி மக்கள் மத்தியில் மீண்டும் மீண்டும் குழப்பத்தையும் வலுவடைய செய்து கொண்டு இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது.நீங்களே பத்வாவை கொடுத்து விட்டு அதை உங்களாலும் உங்களின் கிளைகளாலும் நடை முறைப்படுத்த முடிய வில்லை என்றால் இந்த பத்வா யாருக்காக கொடுத்தீர்கள். அல்லது பத்வாவை கொடுத்துவிட்டு யாருக்கு பயத்தில் செயல் படுத்த முடியாமல் தவிக்கிறீர்கள்.இதன் உண்மை தன்மை என்ன என்பதை பொது மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும்.
அதே போன்று கடந்த காலங்களில் பெண்கள் முகத்தை மூடியே ஆக வேண்டும் என்ற கோட்பாட்டில் நீங்கள் இருந்து வருகின்றீர்கள். ஆனால், அதை நமது நாட்டில் சில இஸ்லாமிய அமைப்புகள் முகம் மூட வேண்டிய அவசியம் இல்லை அது நபிகளாரின் மனைவியர்களுக்கு மட்டுமான சட்டம் என்று வாதாடி வருகின்றார்கள். அவ்வாறு இருக்கும் நிலையில்அண்மையில் தனியார் தொலைகாட்சி is ISஇஸ்லாமும் பயங்கரவாதமும் என்ற அடிப்படையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது அதில் அ இ ஜ உ சார்பாக கலந்து கொண்டவரிடம் முகம் மூடுவது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு முகல் மூடுவது இஸ்லாத்தில் இல்லை என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.இவ்வாறு கூறும் நீங்கள் தெளிவாக உறுதியான முறையில் இவ்வாறான தீர்ப்புகளை கொடுத்தால் தளம்பிக்கிடக்கும் மக்கள் மத்தியில் உண்மை போய்சேர வழிவகுக்கும் என்பதில் சந்தேகள் இல்லை.
இதுவரையும் நீங்கள் கொடுக்கும் பத்வாக்களால் பொது மக்கள் திருப்தியடைந்ததாக இல்லை. மாறாக குழப்பமடைந்து ஊர்கள் இரண்டாகவும் மூன்றாகவும் பிரிந்ததே தவிர ஓன்று பட்டதாக சரித்திரம் இல்லை.
ஆகே அன்புக்குரிய உலமாக்களே இதற்கான் செரியான பதிலை JAFFNAMUSLIMஜப்னா முஸ்லிம் ஊடாக வழங்குமாறு தயவாய் கேட்டுக்கொன்கிறேன்.
வஸ்ஸலாம்
This comment has been removed by the author.
ReplyDeleteவிரும்பினால் அணிந்து கொள்ளலாம் என்றால் நமது சகோதரர்களுல் சிலர் அதை விரும்பாததுடன் அதற்கு தடையாகவும் இருக்கின்றனர். வைக்கோலில் படுக்கிற.....போல. உங்களது மனைவி/சகோதரி/மகளின் முக அழகை வேறொருத்தன் பார்த்து ரசிக்கும் போது உங்களுக்கு வெட்கம் வரவில்லை என்றாலும் வெட்கப்படுபவனைப் பார்த்து நீங்கள் ஒன்றும் சொல்லாமல் வாயை மூடிக் கொண்டு சும்மா இருங்கள்.
ReplyDeleteமுகத்திரை விடயத்தில் அதை அணிய வேண்டும் என்பதுதான் நம் நாட்டிலுள்ள பெரும்பாலான உலமாக்களின் கருத்து.இது விடயத்தில் இஸ்லாத்தினுடைய நிலைப்பாட்டை விளங்கிக் கொள்வதில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் அணிய வேண்டும் என்ற புரிதல்தான் இறையச்சத்திற்கு நெருக்கமானது.இஸ்லாம் வெறுமெனே சட்டங்களைச் சொல்லுகின்ற மார்க்கமல்ல. அதற்கான சூழலையும் உருவாக்க விளைகின்ற மார்க்கம்.மனசாட்சியை வைத்துக் கேளுங்கள், பாதையில் முகத்திரை அணிந்து கொண்டு ஒரு பெண் போகிறார் அவரைப் பார்த்து யாருக்கேனும் பாவத்துடைய சிந்தனை வருமா? காழ்புணர்ச்சி இல்லாவிடில் நிச்சயம் கண்ணியமான ஒரு பார்வையே எழும். இது தெவை இல்லை என்பவர்கள் எதைச் சொல்ல வருகிறீர்கள்.கண்களால் விபச்சாரம் செய்வதற்கு அலைந்து கொண்டிருக்கின்ற கூட்டத்திற்கு வழியமைத்துக்கொடுக்க வேண்டுமென்றா? முகத்திரையுடனான கண்ணியமான வாழ்க்கை பெண்களிடத்தில் வர வேண்டும் என்பது பிந்திய இரவுகளில் அல்லாஹ்வுக்கு முன் மண்டியிட்டு அழுகின்ற இயல்புடைய உலமாக்களின் அவா.அல்லாஹ் அதை அணிகின்ற கூட்டத்தை மேன்மேலும் அதிகரிக்கவே செய்வான்.இதில் கைவைத்தால் அரசியலிலும் பாரிய பின்னடைவு ஏற்படும் அது வெளிநாட்டு அழுத்தம் என்பது மட்டுமல்ல பெரும்பாலான முஸ்லிம்களின் விருப்பத்திற்கு மாற்றமான தீர்மானமாக அது அமையும் என்ற உள்ளக காரணியாலும்தான். ஏனெனில் பெரும்பாலான முஸ்லிம்கள் இதற்கு ஆதரவானவர்களே. இதற்கு மாற்றமாக இது விடயத்தில் வெறுப்பேற்றி கூக்குரலிடுவோர் மிக சொற்பமானவர்களே.
ReplyDelete