பான் கி மூனின் கவனயீர்ப்பைப்பெற, கொழும்பில் முஸ்லிம்கள் பேரணி
உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் கொழும்பில் தங்கியிருக்கும் போது இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை அவரது கவனத்திற்குக் கொண்டுவரும் வகையிலான அமைதிப் பேரணியொன்று ஐ.நா.காரியாலயத்தின் முன்பாக நடாத்தப்படவுள்ளது.
வடக்கு விஜயம் மேற்கொண்டு தமிழர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவது போன்று கிழக்கிற்கும் ஐ.நா. செயலாளர் நாயகம் விஜயம் செய்து முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் கேட்டறிய வேண்டும் என அமைதிப்பேரணியில் வலியறுத்தப்படவுள்ளது.
ஐ.நா. செயலாளர் நாயகத்தை கிழக்கிற்கும் அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.
முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், வட,கிழக்கில் முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை, பள்ளிவாசல்களுக்கெதிரான பிரச்சினைகள், முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வையூட்டும் பேச்சுக்கள், ‘சிங்ஹலே’ அமைப்பினர் ½ மணித்தியாலயத்துக்குள் முஸ்லிம்களை அழித்துவிடுமோம் என்ற அச்சுறுத்தல்கள், சவூதி சுனாமி வீட்டுத்திட்டம் என்பன தொடர்பான விபரங்கள் அடங்கிய மகஜரொன்றும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்படவுள்ளது.
ஐக்கிய சமாதான முன்னணி இதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. அமைதிப் பேரணியில் முஸ்லிம்கள் பெருமளவில் கலந்துகொண்டு கவனயீர்ப்பினை வெளியிட வேண்டுமென ஐக்கிய சமாதான முன்னணியின் தலைவர் ஐ.என்.எம்.மிப்லால் தெரிவித்தார்.
எதிர்வரும் 31ஆம் திகதி இலங்கை வரவுள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கி மூன் முதலாம், இரண்டாம் திகதிகளில் இலங்கையில் தங்கியிருந்து சந்திப்புகளில் கலந்து கொள்ளவுள்ளார்.
ஐ.நா. செயலாளர் நாயகம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கருஜயசூரிய, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட்குரே வடக்கு முதலமைச்சர் விக்னேஷ்வரன் ஆகியோரைச் சந்தித்து செப்டெம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்து சந்திப்புகளில் கலந்துகொள்ளவுள்ளதுடன் நிலைமைகளையும் பார்வையிடவுள்ளார். கொழும்பு லக் ஷ்மன் கதிர்காமர் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வில் நிரந்தரமான சமாதானம் தொடர்பில் உரையாற்றவுள்ளார்.
பான் கி மூன் முஸ்லிம் தரப்புகளைச் சந்திப்பது தொடர்பில் இதுவரை உத்தியோகபூர்வமான அறிவித்தல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
விடிவெள்ளி ARA.Fareel
ராஜபட்ஷ காலத்தில் UN இலங்கையில் தலையிடுவதை எதிர்த்து போராடினார்கள். முஸ்ஸிம் தலைவர்கள் முஸ்ஸிம் நாடுகளுக்கு சென்று ஜெனீவா தீர்மானங்களை எதிராக ஆதரவு திரட்டினார்கள். ஆணால் அமேரிக்கா வென்றுவிட்டது.
ReplyDeleteஇப்போது UN தலையிடவேண்டி போராடுகிறார்களாம். காமடி பேர்வளிகள்.
முட்டாள் தலைவர்கள் அப்போது அதை எதிர்காமல் தங்களது கோரிக்கைகளையும் தீர்மானத்தில் சேர்த்து நிறைவேற்றிருக்கமுடியும்
This comment has been removed by the author.
DeleteMuslim leaders should meet Banki Moon and address the grievances of Muslim refugees in North.
ReplyDeleteYou are correct in some sense
ReplyDeleteBut one thing for sure America will play both sides
ReplyDelete(அஜன் அந்தோனிராஜ்அவர்களே)அப்போது விடுதலைப்புலிகளுக்கு எதிராக செயல்பட்டாரகள் இப்பொழுது அவர்களால் பாதிக்கப்பட்ட வர்கள் நீதி கேட்கின்றாரகள் இதில் என்ன தவறு இருக்கின்றது,
ReplyDeleteஒரு விடயத்தை விளங்கவேனும் 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த ராஐபக்ஸசாவுக்கு த்தானே மக்கள் வாக்களிக்க வேனும் ஏன் மாறாக நல்லாட்சிக்கு வாக்களித்தனர் விடுதலைப்புலிகலும் ராஜபக்ஸ அரசாங்கமும் கிட்டத்தட்ட ஒரேமாதிரித்தான்
செயல் பட்டனர் அதனால்தான் அவர்களும் விரட்டப்பட்டனர்,
உங்கள் கதை காக்கையின் கூட்டில் குயில் முட்டை இட்டு தன் கூடு என்று வாதிடுவதுபோல்
உள்ளது, நான் இதில் யாரையும் கூறை கூறவில்லை சந்தர்ப்த்திற்கேற்ப மாற்றங்களினால் வந்த விபரிதம் இதனால் பாதிக்கப்பட்டது மூவினமும் பாதிக்கப்பட்டுள்ளது ஆகையினால்
எல்லோரும் நீதி கேட்டு நிற்கின்றனர் இன்னும் சொல்லப்போனால் தமிழர்கள் தங்களுடைய
உறுமைக்காக போராடினார்கள் இதில் முஸ்லிம்கள் எந்த தடையாகவும் இருந்தது இல்லை
இன்னும் சொல்லப்போனால் முஸ்லிம்களும் போராட்டத்தில் பங்கெடுத்துள்ளாரகள்
அடுத்து அரசாங்கத்தின் பிரச்சனை அவர்கள் தமிழர்களின் பிரச்சனைக்கு முடி வெடுக்க வில்லையைன்றால் அது அவர்களின் பிரச்சனை இதில் அப்பாவி முஸ்லீம்கள் ஏன் விரட்டப்படவேனும்,
Dear friend Meera,
Deleteஅப்போது வி.புலிகளுக்கு எதிராக போரடினீர்கள் என்பது 100% பொய். ஏனெனில்
(1) 2009 யில் LTTE அழிக்கப்பட்டு விட்டார்கள்.
(2) தீர்மானங்களில் LTTE யின் தவறுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளது.
(3) USA/UK/இந்தியா உட்பட நாடுகளில் Ltte பயங்கரவாத அமைப்பாக அறிவக்கபட்டுள்ளது.
எனவே ஜெனிவா தீர்மாணங்கள் LTTE க்கு ஆதரவாணதாக இருக்கமுடியாது.
நீங்கள் எதிர்த்தற்கான காரணங்கள்;
(1) இதனால் தமிழர்களுக்கு உரிமைகள் ஏதாவது கிடைத்துவிடகூடாது எனும் மனநிலை,
(3) LTTE யில் ஏற்பட்ட கோபத்தில் சாதாரண தமிழர்களை பழிவாங்க,
(2) பதவி/பணம்/சிறு சலுகைகள் காக ராஜபக்ஷாகளை குஷிபடுத்த முயற்சித்த மு/தலைவர்கள்
ராஜபக்ஷ்வின் காலத்தில், முஸ்லிம்கள் ஜெனீவாவிட்க்கு போனார்கள் விடுதலைப் புலிகளினால் முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்கள் அட்டூழியங்களை பற்றி முறியிடுவதட்காகவே தவிர ராஜபக்க்ஷவை காப்பற்றுவதற்க அல்ல . இப்போது சின்ஹல இனவாதத்துக்கு எதிராகவும் விக்னேஸ்வரனின் தீவிரவாதத்துக்கு எதிராகவும் முஸ்லிம்கள் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள் . அதட்க்காக U N இக்கு மட்டுமல்ல எங்கு வேண்டுமானாலும் முஸ்லீம்கள் போவதட்கு தயாரகிவிட்டார்கள் .
ReplyDeleteShihabdeen, ஒரு தவறை மறைக்க இன்னொரு பொய்யை சொல்ல முயலத் தேவையில்லை. தவறை தவறு என்று ஏற்றுகொள்வது, இனிவரும் சந்ததிகளாவது இதுபோன்ற தவறுகளை செய்யாமல் இருக்க உதவும். ஜெனிவா சென்றது உண்மையில் ராஜபக்ஷக்களை காப்பாற்றுவதற்குத்தான். அதற்காகத்தான் நட்சத்திர ஹோட்டல் உபசரிப்பு, முதல்வகுப்பு விமான டிக்கட் எல்லாம் அரசால் கொடுக்கப்பட்டன. அவர்களது மொத்த செலவும் அரசாங்கத்தினாலேயே மேற்கொள்ளப் பட்டன.
ReplyDeleteஹனீபா : முஸ்லீம்கள் ஜெனீவாவிட்கு போனது ராஜபக்க்ஷ புலிகளின் பயங்கரவாத்தை முற்றாக ஒலித்தது முற்றிலும் சரி என்று சொல்வதைக்கே, அதன் மறுபக்கம் என்னவென்றால், புலிகளின் பயங்கரவாத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதாகும். நீங்கள் சொல்லுங்கள் , புலிகளை முற்றாக ஒலித்தது சரியா தவறா ? தவறு என்று சொன்னால் நீங்களும் புலிகளின் பழைய உறுப்பினரா ?
ReplyDeleteஜெனீவாவிட்கு போனது , அதன் முழு விபரங்களும் சொல்லுகிறீரகள் , அது தவறு என்றால், அதை தடுப்பதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள் ? சம்பந்தப்பட்டவர்ஹளுடன் பேசினீரகள ? அல்லது எமது சமூகத்துக்கு எடுத்துச் சொன்னீரஹலா ? தவறை தவறு என்று சொல்ல வேண்டும் என்பது உங்கள் கொல்ஹை :
Well said Ajan!!!
ReplyDelete
ReplyDeleteYes all the problem is created by Jamiathul Ulama and it's leaders.It's members acted as stooge of Rajapakshe including Niyas Moulavi.These stooge without knowing the nature of UNO,America and the west visited Geneva to stop America sponsored resolution.Now because of that Muslim world is burning.Srilankan Muslims are under atack. now going after UNO is no use and it is big joke,it is UNO wanted to do justice to the minorities then.