Header Ads



முஸ்­லிம்கள் கொள்கை ரீதி­யாக பிள­வு­பட்டு, ஆதிக்கம்செலுத்த முயன்றால் சட்­டத்தின் மூலம் தடுக்­க­ப்­படும் - வக்பு சபை எச்சரிக்கை

-விடிவெள்ளி  ARA.Fareel-

 பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் பள்­ளி­வாசல் மூலம் தங்­க­ளது தனிப்­பட்ட கருத்­துக்­க­ளையே பரப்­பி­வ­ரு­கி­றார்கள். இது தவிர்க்­கப்­பட வேண்டும். பள்­ளி­வாசல் நிர்­வா­கி­களின் கடமை வக்பு சொத்­துக்­களைக் காப்­பாற்றி மக்­க­ளுக்குச் சேவை செய்­வ­தாகும் என வக்பு சபையின் தலைவர் சட்­டத்­த­ரணி எஸ்.எம்.எம்.யாஸீன் தெரி­வித்தார்.

முஸ்லிம் கிரா­மங்­களில் கொள்கை ரீதி­யான பிரச்­சி­னைகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்த தெரி­விக்­கையில்,

பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நிர்­வா­கிகள் நிய­மிக்­கப்­ப­டு­வது தனிப்­பட்ட கொள்­கை­களைப் பரப்­பு­வ­தற்­கா­க­வல்ல.

நிர்­வாகம் சுயா­தீ­ன­மாக இயங்க வேண்டும். ஒரே கிரா­மத்தில் அல்­லது பிர­தே­சத்தில் கொள்கை ரீதி­யாக வேறு­பட்ட பல பள்­ளி­வா­சல்கள், தக்­கி­யாக்கள் இயங்­கு­வதால் பிரச்­சி­னைகள் உரு­வா­கு­கின்­றன. பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள் தனிப்­பட்ட கொள்­கை­க­ளுக்கு இட­ம­ளிக்­காது செயற்­பட்டால் பிரச்­சி­னைகள் ஏற்­ப­டு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­காது.

பள்­ளி­வாசல் நிர்­வா­கத்­துக்குள் ஜன­நா­யகம் பேணப்­பட வேண்டும். நிர்­வாக சபையில் 30 வீதம் படித்த இளை­ஞர்கள் உள்­வாங்­கப்­பட வேண்டும். புத்­தி­ஜீ­வி­க­ளுக்கும் இட­ம­ளிக்­கப்­பட வேண்டும். முஸ்­லிம்கள் கொள்கை ரீதி­யாக பிள­வு­பட்டு ஆதிக்கம் செலுத்த முயன்றால் அது நாட்­டி­லுள்ள சட்­டத்தின் மூலம் தடுக்­க­மு­யற்­சிக்­கப்­படும்.

இதனால் நாம் பல பிரச்­சி­னை­களை எதிர்­கொள்ள வேண்­டி­யேற்­படும்.ஒரு பிர­தே­சத்தில் பல பள்­ளி­வா­சல்கள் இயங்­கி­வரும் நிலையில் அப்பள்ளிவாசல்களுக்கிடையில் கொள்கை ரீதியாக பிரச்சினைகள் ஏற்பட்டால் அப்பிரதேசத்திலுள்ள பெரிய பள்ளிவாசல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியேற்படும் என்றார்.

15 comments:

  1. பள்ளிவாசலில் இஸ்லாமிய சட்டத்துக்குஉட்பட்டு ஜனநாயகம் பேணப்பட வேண்டும்

    ReplyDelete
  2. கொள்கைகள் அடிப்படையில் பிரிந்து கிடக்க காரணம் பள்ளிகளின் நிருவாகத்துக்கு தெரிவு செய்யப்படும் நிருவாகிகளுக்கு போதிஇஸ்லாமிய அறிவும் தக்வாவும் இல்லாகாரணம் தான்,தற்போது இலங்கைல் எவ்வாறான வழிகளினாலும் பணம் சம்பாரித்து பணம் இருந்தால் அவனுக்கு அ உ அலிப் பே,தெரியாவிட்டாலும் அவனை பள்ளி நிருவாகத்துக்கு தெரிவு செய்கிறார்கள் இப்படிப்பட்ட தரங்கெட்டவர்களை யார் தெரிவு செய்வது ஜமாஅத்தார்கள்தான் ஏன் தெரிவு செய்கிறார்கள் அவரிடத்தில் தொழிலுக்கு கடன் வாங்கி இருப்பது ,அல்லது குடும்ப உறவுகள் இவ்வாறு நிருவாக தெரிவும் வக்ப் சபையின் பிரதிநிதிகளின் முன்னிலையில்தான்,குர்ஆனையும் ஹதிஷையும் பின்பற்றும் சிந்தனையுள்ள அதற்கேற்ப அறிவுத் திறமையுள்ளவர்களை தெரீவு செய்தால் எந்த கொள்கை பிரச்சினையும் வராது,இதைனை பின்பற்றாமல்.கஞ்சாறன் ,வட்டிக்காறன்,முற்பணத்துக்கு ஒரு விலை கடனுக்கு ஒரு விலை விற்பனை செய்யும் கடைக்காறன்,எவ்வழிலேனும் ஹஜ்ஜுக்கு போய் வந்த ஹாஜியார் இன்னும் பல இஸ்லாம் வெறுக்கக்கூடிய தொழிலும் பபாவமும் செய்யக்கூடியவர்களை யார் யார் எல்லாம் அல்லாஹ் மாளிகையை பரிபாலிக்க தகுதியற்றவனோ அவனல்லாம் தெரிவு செய்யப்பட்டால் எவ்வாறு ஒற்றுமையும் நேர்மையும் உண்டாகும் .எத்தனையோ பள்ளிவாசல் நிருவாகிகள் அடுத்து வந்த புதிய நிருவாகத்திடம் கணக்குவழக்கு காட்டாமல் மீதி பணம் கூடுக்காமல் கணக்கறிக்கை புத்தகத்தை கறயான் திண்டுவிட்டது அல்லது காணாமல் போய்விட்டது என்று சொல்லி அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி சண்டித்த்தனதோடு தப்பித்துக் கொண்டு இருக்ரார்கள்

    ReplyDelete
  3. சகோதரர் முஸ்தபா அவர்களே உங்கள் பதிவோடு நானும் ஒத்துபோகின்றேன் அதநேரம் இன்னும் சொல்லபோனால் முறையாக அல்லாஹ்வை பயந்து நடக்கும் நபார்கள் தற்போது பள்ளிநிர்வாகத்தில் தலையிடுவது குறைவு காரணம் எதாவது ஒரு பிரச்சினை வரும்போது ஊரில் உள்ள சண்டியர்கள் எல்லாம் பள்ளி வாயிலில் வந்து தீர்ப்பு சொள்ளவருவார்கள் அதை அல்லாஹ்வுக்கு பயந்தவன் ஏற்காத சந்தர்பத்தில் அவருக்கு நல்ல சொற்களால் பதில் வராது. இதுமாதிரி நிறைய வேறுபல விடயங்களால் நல்ல முதுமை பெற்ற அறிவாளிகள் பள்ளி நிர்வாக விடயங்களில் தலையிடிவது குறைவு இப்படி அல்லது இம்மாதிரியான சந்தர்பங்களில் படிப்பில் குறைந்த கள்ளனும் காவாலிகளும் மற்றும் பல குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்த பணம் படைத்தவர்களும் தான் பள்ளிவாசலின் நிவாகதுக்கு தெரிவாகின்றனர் இனி என்ன இவர்கள் போடுவது தான் சட்டம் இதை ஏற்காதவர்கள் இந்த பணக்காரர்களின் கைக்கூலிகளால் தக்கபடுவார்கள். இதுபோல் இன்னும் எத்தனையோ காரணங்கள் சொல்லலாம்.
    இப்படியானவர்கள் தெரிவு செய்யப்பட ஊர்மக்களும் ஒரு காரணம் பெரும்பாலும் பள்ளி வசூல் கட்ட ஓடி ஒளிக்கும் கூட்டம் இப்படியானவர்களுக்கு கூடிய ஆதரவு காட்டுவர்......................................................

    ReplyDelete
  4. yaarath theriwu saidhaalum thawkkararkalay poadawaanam. awarhkal kattukku adngaade weriyarkhal

    ReplyDelete
  5. mustafa, குரானையும் ஹதீசையும் பின்பற்றும் சிந்தனைய்ள்ளவர்கள் யார் என்று யார் முடிவு செய்வது?
    குரானையும் ஹதீசையும் பின்பற்றுகின்றோம் என்று வந்த தவ்ஹீத் ஜமாஅத் கூட்டங்களே ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு, பல பிரிவுகளாக பிறந்து, சந்திக்கொரு TJ என்று இருக்கும் நிலையில், யார் சொல்வது சரியான குரான் ஹதீஸ்?

    ReplyDelete
  6. குரான், ஹதீஸ் மட்டும் போதும் என்று சொல்லிக்கொண்டு (அரபுநாட்டு பணத்துடன்) வந்தவர்கள் புதிய பிரிவை ஏற்படுத்தியதை விட, அவர்களே தங்களுக்குள் பிரிந்து, இருந்ததை விடவும் அதிக பிரிவுகளை தங்களுக்குள்ளேயே ஏற்படுத்திக் கொண்டார்கள்.

    குரான், ஹதீஸ் என்று பேசுபவர்கள் மத்தியிலேயே சூனியம் இருககா, இல்லையா என்கின்ற அக்கப்போரே முடியவில்லை, அதல்லாமல், எப்பொழுது பெருநாள் என்று கூடத் தெரியாமல் இவர்கள் மட்டும் இரண்டு நாள், மூன்றுநாள் பெருநாள் தொழுகின்றார்கள், இந்த நிலைமையில் இவர்கள் எப்படி மற்றவர்களுக்கு வழிகாட்ட முடியும்?

    ReplyDelete
  7. Brother Yasmin..

    Please Read following

    1. What is SOOFISM ? Is it accepted in Islam or NOT
    2. Who are DEOBAND in india and Do they follow tHe way of SAHAABA ? or they have any connection to SOOFI manhanj.
    3. What is basis of TABLEEG ? Why their books still carry SOOFI storeis and they are placed in masjid and are given more precendent then Quran, Hadees and Books of Immams.
    4. Why it is still difficult for ACJU to teach PURE Form of ISLAM openly to public? Even after Quran and Hadees are clear to them why they compromise the TRUE message of ISLAM with the ANCESTORS way of misguidance.

    At last: SAHAABA (ral) obey as " SAMI-NA WA-ATAHNA " But why ACJU, TABLEEG group and Its supporter Still Not Obey the Sunnah even after it become clear to them but they wanted continue practicing Village customs and Innovations (BIDA)

    WE are to follow Not SOOFISM, ACJU or ANY TAW groups BUT were to Practice ISLAM by learning it from PURE sources, such as QURAN and SUNNAH as they were understood by the SALAF (3 successfull generation) and learn the deen from scholars who stick to the way of SALAF but not so called scholars who learned from SOOFI DEOBAND schools.

    May Allah guide you, me and all in the path of SALAF,

    ReplyDelete
  8. Yasmin Lafir அல் குர்ஆனையும் ஹதீசையும் இந்த TJ பிரிவுகள் தான் பின்பற்றுகிறார்கள் என்று யார் சொன்னது? அவர்கள்தான் சொல்லிக் கொள்கிறார்கள்.

    ReplyDelete
  9. If register in you masjid வகுப் board your masjid should be pay yearly collection money in personentage. இதுக்கு காரனம் சொல்லுங .

    ReplyDelete
    Replies
    1. மூளை உள்ளவர்களிடம் மாத்திரம் கேள்வி கேழுங்கள்.
      Halal certificate இற்கு பணம் எதற்கு ?
      பிறை கண்டாலும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்
      ஷியாயிசம் , ஷிர்க் போன்றவற்றை பகிரங்கமாக செய்யும் பள்ளிகளிடம் எந்த கேள்வியும் இல்லை.
      அதற்கு கம்பு தடி ஏந்தமாட்டார்கள்
      ஆனால் ஊரில் பிளவு உண்டுபன்னுகிறார்கள் என்று சொல்லி சக முஸ்லிமை இரத்தம் சிந்துமளவுக்கு தாக்குகிறார்கள்.
      எப்படி அவர்களின் ஈமான்?

      Delete
  10. Rasheed, உங்களது இறக்குமதிக் கொள்கையை திணிக்க இங்க்லீஸ் வகுப்பெடுக்க வேண்டாம். முடியுமாக இருந்தால் தமிழில் கருத்தை சொல்லுங்கள்.

    இலங்கை முஸ்லிம்களை அமைதியாகவும், நிம்மதியாகவும், ஒற்றுமையாகவும் வாழ விடுங்கள். கொமிஷனுக்கு பள்ளிவாசல் கட்டும் அரேபிய இறக்குமதிக் குப்பைக் கலாச்சாரங்கள் வந்த பின்னர்தான் முஸ்லிம்கள் மத்தியில் வன்முறைகள், பள்ளிவாசல்களில் முஸ்லிம்களே முஸ்லிம்களை கொலை செய்துகொண்ட கோர நிகழ்வுகள், அன்னியவர்களால் மிகவும் சந்தேகத்துடனும், வெறுப்புடனும் முஸ்லிம்கள் பார்க்கப்படும் நிலைமை என்று அனைத்தும் தோற்றம் பெற்றன.

    ReplyDelete
  11. சகோ.ரஷீட் பற்றற்ற வாழ்க்கை வழிமுறை இஸ்லாத்தினுடைய அடிப்படை சிந்தனை. சலபு சாலிஹீன்களின் வாழ்விலயலை ஆராய்ந்தால் அது அவர்களின் உயிராக இருந்ததை அறியலாம்.அச்சிந்தனை நபியிடமிருந்து சஹாபக்களிடமும் இமாம்களிடமும் மிக வலிமையாக இருந்தது.சலாஹுதீன் ஐயுபீ (ரஹ்) அவர்களும் அச்சிந்தனையை அதிகமாகக் கடைபிடித்தவர்தான். எப்போதெல்லாம் இச்சிந்தனையை விட்டு சமூகம் துாரமாகுமோ அப்போது உலக மோகத்தில் வீழ்ந்துவிடும். ஆனால் போலியான சூபிசம் அதிகம் உள்ளதென்பதை மறுப்பதற்கில்லை.உண்மையான சூபிஸம் ஸுஹுதை (பற்றற்ற வாழ்வை) பிரதிபலிப்பது அதை மறுப்பது இஸ்லாத்தின் அடிப்படை சிந்தனையை மறுதலிப்பதற்கு ஒப்பானது.

    ReplyDelete
    Replies
    1. சூபியிசம் ஒரு ஷிர்க். அதிலிருந்து அல்லாஹ் எங்களை பாதுகாப்பானாக!

      Delete
  12. Brother aariff Ali,

    For information and further research by youself.

    SOOFISM is not form Anbiyas or SAHABAAS.. Soofims is nothing to do with leaving worldly life. Rather

    Soofism was introduced ISLAM by person called IBN ARABI, who brought the GREEK philoshopy into Islam and blended it. Then started SOOFISM with the base of " WAHDATHUL WUJOOD " concept, which means EVERYTHING IS ALLAH. This not the way of Anbiya or Sahaabas. Please keep read more about SOOFISM .. You will find they have 4 stages in their DEEN. 1st is SHAREEA (what anbiyas followed and we do ), 2nd is HAKEEKATH, then MAHRIFATH and finally BANAH. As per them every one should pass the 1st stage and If qualifed to 2nd level HAKEEKAH then no need to follow SAHREEA ( means no need to pray 5 times, no fasting so on). May Allah Save us from this evil Manhaj of Satans.

    Brother what you have learnt about good soofi site... Allah knows best. BUT We are to follow the QURAN and HADEES in a way they were undestood and practiced by SAHAABAs.

    FOR THOSE who refuse ISLAM from ARAB Land... We thanks Allah that He did not send MUHAMMED (sal) duirng this time,, if not these so called unity Srilankan classical people would have refuted the Nabi also.

    May Allah Guide is in Correct Path of ISLAM as it was understood and practiced by Muhammed (sal) and His companions.

    ReplyDelete
  13. நீங்கள் கூறிய விடயங்களை நானும் படித்திருக்கிறேன்.நான் சொல்ல வந்நது கிரேக்க, இந்திய ஞானிகளின் செல்வாக்கிற்கு உட்பட்டதையல்ல. நபியின் சுப்பா வாசிகளின் வாழ்வியலில் இருந்தும் அந்த சொல்லிலிருந்தும் அறியப்பட்ட பற்றற்ற வாழ்வு குறித்த நிலையைத்தான்.சூபிஸத்தை மறுப்பதற்காக பற்றற்ற வாழ்வு நிலையையும் மறுக்கப்படுகிறது. அதைத்தான் சுட்டிக்காட்ட விளைந்தேன்.

    ReplyDelete

Powered by Blogger.