யாழ்ப்பாணத்திற்கு வந்த 7 அடி நீளமான, டொல்பின் மீன் புதைக்கப்பட்டது (படங்கள்)
யாழ்.மதாகல்-குசுமந்தர கடற்பரப்பில் 7 அடி நீளமான டொல்பின் மீன் தற்செயலாக இறந்த நிலையில் மீனவரின் வலையில் அகப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
குறித்த மீனவர் மீன்பிடிப்பதற்காக இன்று(31) காலை கடலில் வலை வீசியிருந்த போது, அவரின் வலைக்கும் டொல்பின் மீன் அகப்பட்டுள்ளது.
மீனவர் உடனடியாக கடற்படையினருக்கு தகவல் வழங்கியதன் பிரகாரம், கடற்றொழில் நீரியல்வளத்துறையினர் அறிவித்துள்ளனர்.
பின்னர் கடற்றொழில் நீரியல்வளத்துறையினர் அப்பகுதிக்கு சென்று மீனை பெற்றுக்கொண்டதுடன், அந்தப்பகுதியிலே மீனை புதைத்துள்ளனர்.
குறித்த மீன் சுமார் 7 அடி நீளமான 100 கிலோவிற்கும் அதிகமான எடையுடைய டொல்பின் மீன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Post a Comment