கடத்தப்பட்ட வர்த்தகரின் ஜனாஸா மாவனெல்ல வைத்தியசாலையில் - 7 பொலிஸ் குழுக்கள் நியமிப்பு
பம்பலபிட்டி பகுதியில் வைத்து கடத்தப்பட்டு காணாமல் போனதாக கூறப்படும் பிரபல வர்த்தகர் மாவநெல்ல பிரதேசத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று இரவு, இவரது சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொரிஸார் தெரிவித்துள்ளனர். மாவநெல்ல பகுதியில் அடையாளம் காணமுடியாத இளைஞர் ஒருவரின் சடலம் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் வர்த்தகரின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டதுடன், குற்றப் புலனாய்வு பொலிஸார் குடும்பத்தாருடன் மாவநெல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளனர்.
பின்னர் இரவு 10 மணியளவில் அங்கு காணப்பட்ட சடலம் கடத்தப்பட்ட வர்த்தகருடையது என அவருடைய குடும்பத்தார் அடையாளம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக மாவநெல்ல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும். கடத்தல் தொடர்பில் 7விஷேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை வர்த்தக ரீதியான பகை காரணமாக இந்த கொலை இடம் பெற்றிருக்கலாம் என்ற கோணத்தில் தாம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment