6000 வருடங்களுக்கு முன் இலங்கையர்கள், சர்வதேச தொடர்பு வைத்திருந்த ஆதாரங்கள் கண்டுபிடிப்பு
-Nf-
இலங்கையர்கள் 6000 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச சமூகத்தினருடன் தொடர்புகளை வைத்திருந்தமைக்கான ஆதாரங்கள் பலாங்கொடையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
களனி பல்கலைக்கழகத்தின் புவிச்சரிதவியல் முதுகலைமானி பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் முன்னெடுக்கப்படும் அகழ்வுப்பணிகளில் இவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட முத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் ராஜ் சோமதேவ குறிப்பிட்டுள்ளார்.
இந்த புதிய கண்டிபிடிப்பு இலங்கை மனிதகுல வரலாற்றில் முக்கிய மைல்கல் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அகழ்வின் போது சேதமடைந்த கல் ஆயுதங்கள் சிலவும் கண்டிபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பேராசிரியர் தெரிவித்துள்ளார்.
Post a Comment