மின்னல் தாக்கி 300 கலைமான்கள் பலி
மத்திய நோர்வே தேசிய பூங்கா ஒன்றில் மின்னல் தாக்கி 300க்கும் அதிகமான கலைமான்கள் கொல்லப்பட்டுள்ளன. இது ஒரு அசாதாரணமான இயற்கை அனர்த்தம் என்று வனவிலங்கு அதிகாரிகள் விபரித்துள்ளனர்.
நோர்வே சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டிருக்கும் அதிர்ச்சி தரும் புகைப்படங்களில் மலைப்பிரதேசம் ஒன்றில் சிறிய பகுதியில் கலைமான்களின் உடல்கள் சிதறிக்கிடப்பது பதிவாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் 26ஆம் திகதியே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இதன்போது 323 விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதோடு அதில் 73 மாடுகளும் அடங்குகின்றன. புயல்காற்று மற்றும் மின்னல் தாக்கியபோது அனைத்து விலங்குகளும் ஓர் இடைத்தில் நெருங்கி இருந்ததாக நம்பப்படுகிறது. மின்னல் தாக்கி அதிக எண்ணிக்கையிலான விலங்குகள் கொல்லப்பட்ட சம்பவமாக இது நம்பப்படுகிறது.
2005 ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய பால் பண்ணை ஒன்றில் மின்னல் தாக்கியதில் 68 மாடுகள் கொல்லப்பட்டன.
எனினும் அதிக மனித உயிரிழப்பு நிகழ்ந்த மின்னல் தாக்கிய சம்பவம் 1971ஆம் ஆண்டு பதிவானது. பெருவியன் விமானம் ஒன்று மின்னல் தாக்கி அமேஸன் காட்டில் மோதியதில் 91 பேர் கொல்லப்பட்டனர்.
Post a Comment