அரசுக்கு 1140 கோடி, நஷ்டத்தை ஏற்படுத்திய கோத்தபய
அரசுக்கு ரூபா 1,140 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், கோத்தபாய உள்ளிட்ட மேலும் 7 பேர் மீது லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012.08.07 தொடக்கம் 2015.01.08 காலப் பகுதியில் அவன்காட் மெரிடைம் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்ட பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம் காரணமாக அரசாங்கத்திற்கு ரூபா 1,140 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று (31) புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட குறித்த வழக்கில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் சுஜாதா தமயந்தி ஜயரத்ன, அவன்காட் நிறுவனத் தலைவரான ஓய்வு பெற்ற இராணுவ கேணல் நிஸ்ஸங்க சேனாதிபதி உள்ளிட்ட எட்டு பேர் (பாலித பியசிறி பெனாண்டோ, கருணாரத்ன, பி.ஏ. கொடகவெல, சோமதிலக திஸாநாயக்க, நிஸ்ஸங்க யாபா சேனாதிபதி, ஜயநாத் கொலம்பகே, ஜயரத்ன பெரேரா) உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
Post a Comment