Header Ads



மஹிந்த அணியில், மைத்திரியின் உளவாளிகளா..? 10 பேருக்கு கல்தா கொடுக்காதது ஏன்..??

-Tw-

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் உள்ளக மோதல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

கூட்டு எதிர்க்கட்சிக்குள் செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புலனாய்வாளர் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியின் பாதயாத்திரையை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கடுமையாக விமர்சிக்கும் ஒருவருமாக மஹிந்தானந்த அலுத்கமகே உள்ளார். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்காமல், ஜனாதிபதியை பெரிதான விமர்சிக்காக 10 பேரை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதை தொடர்ந்து இந்த சந்தேக ஏற்பட்டுள்ளது..

அத்துடன் மஹிந்தானந்த அலுத்கமகே தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் அவர் அரசாங்க சொத்துக்களை தவறாக பயன்படுத்தியுள்ளமை உறுதியாகியுள்ள நிலையில் அதற்கான அறிக்கை சட்டமா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ளன. எனினும் இது தொடர்பில் வழக்கு தொடராமல் உள்ளமையும் இந்த சந்தேகத்திற்கு காரணமாகியுள்ளது.

மஹிந்தானந்த அலுத்கமகே அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கொள்வனவு செய்த அசையும், அசையா சொத்துக்கள் மற்றும் வங்கி கணக்கில் இருந்த கோடி கணக்கிலான பணம் சம்பாதிக்கப்பட்ட முறையினை நிரூபிக்க தவறியுள்ளார். இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்தினால் பணம் தூய்மையாக்கல் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக சட்டமா அதிபரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அவர் விளையாட்டு துறை அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் எவ்வித கேள்விப்பத்திர நடைமுறையும் இன்றி 40 அரசாங்க திட்டங்களை அவரது நண்பர்கள் இருவருக்கு வழங்கியமை தொடர்பிலும் மஹிந்தானந்தவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இவ்வாறு சொத்து சேகரித்த முறையினை வெளியிட தவறிய நாமல் ராஜபக்சவுக்கு எதிராக மாத்திரம் அல்ல முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரதானி மற்றும் இலங்கை இராணுவத்தின் மேஜர் நெவில் வண்ணிஆராச்சிக்கு எதிராக அரசாங்கம் தற்போது வரையில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பிளவுப்படுவதனை தவர்ப்பதற்காக மஹிந்தானந்த உட்பட குழுவினர், ஜனாதிபதியின் ஆலோசகர்கள் சிலருடன் கடந்த சில மாதங்களாக கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

மஹிந்தனந்த அலுகமகே தொடர்பில் மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்வாறு முன்னாள் ஜனாதிபதிக்கு நெருக்கமான 10 உறுப்பினர்கள் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் தொடர்பில் விமர்சிக்கும் மஹிந்தனந்த அலுத்கமகே, பந்துல குணவர்தன, குமார வெல்கம, ரமேஷ் பத்திரன, மொஹான் டி சில்வா, ஜோன்ஸ்டன், விதுர விக்ரமநாயக்க, ரஞ்சித் சொய்ஸா, ஜனக வக்கும்பர, கொஹான் ரத்வத்தே போன்ற ராஜபக்சர்களுக்கு நெருக்கமான உறுப்பினர்களை அமைப்பாளர் பதவியில் இருந்து நீக்காமை கூட்டு எதிர்கட்சி பிளவடைந்துள்ளது என்பதனை காட்டுவதற்காக என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எப்படியிருப்பினும் சுதந்திர கட்சியின் பொது செயலாளர், குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத தொகுதி அமைப்பாளர்கள் தங்கள் பதவிகளில் இருந்து நீக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. Mahindananda Aluthgamage and Johnston Fernando are two
    active supporters of Rajapaksas and are under FCID
    investigations. When they are left out to continue with
    Rajapaksa , it is easy to call all of them "rotten eggs"
    like real Alibaba and 40 thieves. Rainbow punishment.
    Very colourful . Some are losing organiser posts, some
    will be taken care of by the courts and others will
    guarantee that Rajapaksa becomes a loser by having their
    company. However , the president has started to react .
    That is good news . Dogs bark and the caravan moves on.

    ReplyDelete

Powered by Blogger.