புர்கான் வானியை ஹீரோ போல, சித்தரிக்கப்படுவது குறித்து நரேந்திர மோடி கவலை
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி பர்கான் வானியை மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தளபதி பர்கான் வானி பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கி சண்டையில் கொல்லப்பட்டார். இதனால் மாநிலம் முழுவதும் வன்முறை வெடித்தது. ஆர்ப்பாட்டக் காரர்கள் பாதுகாப்பு படையினருக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல், கல்வீச்சு, துப்பாக்கி சூடு சம்பவங்களில் 30 பேர் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படை வீரர்கள் 115 பேர் உள்பட 350 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த நிலையில் பிரதமர் மோடி தனது ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்து நேற்று நாடு திரும்பினார். அவர் மூத்த மந்திரிகளை அழைத்து காஷ்மீர் நிலவரம் குறித்து அவசர ஆலோசனை நடத்தினார்.
இதில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், நிதி மந்திரி அருண்ஜெட்லி, ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர், வெளியுறவு மந்திரி சுஷ்மா சுவராஜ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பிரதமரிடம் பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீரில் வெடித்த வன்முறை குறித்து மூத்த மந்திரிகள் விரிவாக எடுத்துக்கூறினர்.
அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு, நாட்டின் அமைதிக்கு எதிராக செயல்பட்ட ஒருவரை மீடியாக்கள் ஹீரோ போல் சித்தரிப்பது தவறானது என பிரதமர் மோடி கவலை தெரிவித்ததாகவும், இது அவரது ஆதரவாளர்களை கலவரத்தை அதிகமாக தூண்டிவிட வழிவகுக்கும் எனவும் பிரதமர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் அதிகம் நிகழ்ந்த பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Modi is a big war criminal
ReplyDelete