Header Ads



ஜாகிர் நாயக் விடயத்தில், நமது கடமை என்ன..?

அஷ்ஷைய்க் அபு உரைப்(f) ஷஹீத் (அஸ்ஹரி) 

இந்திய மத்திய உள்துறை இணை அமைசர் “கிரண் ரிஜுஜு” The Indian Express செய்திசேவைக்கு வழங்கிய பேட்டியில் ‘‘ஷாகிர் நாயக்கின் பேச்சுகள் மிகவும் கவலை அளிக்கின்றன. அவர் மீது நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று கூறி இருப்பதில் இருந்து டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யப்படலாம் என்றே தோன்றுகிறது .

பங்களதேஷ் அரசு டாக்டர் ஷாகிர் நாயக் மீது குற்றம் சாட்டியதாக எந்த பத்திரிகையை மேற்கோள் காட்டினார்களோ  அந்த “The Daily Star”  பத்திரிகையே அந்த செய்தியை மறுத்திருக்கும் வேளையில் டாக்டர் ஷாகிர் நாயகின் தொலைகாட்சி சானல்கள் முடக்கப்பட்டு. அவரது நிர்வாக காரியாலயம் பாதுகாப்பு  தரப்பால் முற்றுகை இடப்பட்டுள்ளது .

இந்திய அரசின் வேகமான இந்த  முன்னகர்வுகளின் மீது பாரிய சந்தேகங்களே எஞ்சிநிற்கிறது.

ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமும்(RSS) அதன் பாசிச கொள்கையில் பிறந்த தற்போதைய இந்திய அரசும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான திட்டமிட்ட நகர்வுகளை 1948 காந்தி கொலையில் ஆரம்பித்து முசாபர் இன அழிப்பு என்று நீட்சிபெற்று இன்று டாக்டர் ஷாகிர் நாயக்கை தொட்டுள்ளது.

அது நாளை இந்திய முஸ்ளிம்களின் அரசியல் விடிவுக்கு போராடும் அசதுதீன் உவைசியையோ , அர்ஷத் மதனியையோ ,சமூக எழுசிகாய் சாத்வீக வழியில் போராடும் அத்துணை இஸ்லாமிய இயங்களையோ தொட்டு தீவிரவாத முத்திரை குத்தி முற்றுபெரலாம் .

ஆனால் இந்த சதி நிகழ்வுகளையும் ,எதிர்கால நகர்வுகளையும் மறந்து டாக்டர் ஷாகிர் நாயக் என்வரை இயக்க வட்டத்தில் அடக்கி இந்த நிகழ்வை அணுக முற்படுவது சிந்தனைக்கும் , இஸ்லாமிய சமூகத்தின் வரலாற்றுக்கும் பொருந்தாத நடைமுறையாகும் .

மோடியின் 45.000 ஆயிரம் கோடி ஊழல் மோசடி அம்பலமாகி இருக்கும் இந்த வேளையில் அதை திசைதிருப்பும் நோக்கில் திட்டமிட்டு பின்னப்படும் சதி வலையோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகின்றனர் .

இந்திய அரசை பொறுத்தவரையில் டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யபட்டால் இந்தியாவில்  பாரிய ஆர்ப்பாடங்களும் எதிர்ப்புகளும் வரும் என்பது தெரிந்தவிடயம்.

இந்த எதிர்ப்புகளை தனது RSS விஷமிகளை வைத்து மிக இலகுவாக ஒரு மதகலவரமாக மாற்றி அதில் இலாபம்தேடும் நரித்தனும் சிலவேலை நடந்தேறாலம் என்பதே எனது அச்சம்

பாசிச சக்திகளின் நடைமுறைகள் நாம் அறிந்தவிடயம் என்ற வகையிள் மதகலவரங்களை ஏதிர்பார்த்து நடத்தப்படும் நகர்வாக இது இருக்குமென்றால் இந்தியாவினுல் காட்டப்படும் எதிர்ப்பும், ஆர்பாட்டங்களும் இந்திய அரசுக்கும், அதன் பாசிச சக்திகளுக்கும் நன்மையானதாகவே அமைந்து விடும் .

இந்த வேளையில் முஸ்லிம்கள் என்ற வகையில் நமது நகர்வுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதை சிந்தித்து செயலாற்றுவது நமது கடமை .

இது டாக்டர் ஷாகிர் நாயக் என்ற ஒரு தனி மனிதனுக்கான ஆதரவு நகர்வுகள் என்பதற்கு மாறாக ஒட்டுமொத்த இஸ்லாமிய பிரசாரர்களுக்கும் ,இஸ்லாத்திற்கும் எதிரானது என்ற கண்ணோட்டத்திலேயே நோக்கப்படல் வேண்டும் .  இந்த அச்சம் நிறைந்த சூழலில் எந்த வித ஆபத்தும் நடந்திடாமல் இருக்க இறைவனை  பிராதிப்பதே  ஒவ்வொரு முஸ்லீமினதும் முதற்கடமையாகும் . 

அந்த வகையில் எனது சிந்தனைக்கு நெருக்கமான ஒரு நகர்வாக நான் பார்ப்பது  டாக்டர் ஷாகிர் நாயக் கைது செய்யப்பட்டால் உலக நாடுகளில் உள்ள முஸ்லில்கள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகைபோராட்டம் நடத்த வேண்டும் என்பதே .

இந்த முற்றுகை போராட்ட நகர்வுகள் அரச நடைமுறைக்கு ஏற்ப மேற்கொள்ளபடுதல் மிக முக்கியம். அவ்வாறு செய்தால் அந்த விடம் அந்ததந்த நாட்டு இந்திய தூதரகங்களுக்கு பாதுகாப்பு தரப்பால் அரிவிக்கப்படும். அந்த அறிவுப்புகள் இந்திய மத்திய அரசுக்கு நிச்சயம் தெரியவரும். சிலவேலை இந்த நகர்வு  டாக்டர் ஷாக்கிர் நாயகின் கைதையும், இந்திய முஸ்லிம்களுக்கு ஏற்படலாம் என்று கருதப்படும்  இழப்புகளையும் தடுக்கும் ஒரு முயற்சியாக இருக்கலாம் .

இஸ்லாமிய நாடுகள் உட்பட கருத்து சுதத்திரத்தை மதிக்கும் ஒவ்வொரு நாட்டிலும் இதை மேட்கொள்ளமுடியும் ஒரே நேரத்தில் கிட்டத்தட்ட அறுபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடைமுறையை சாத்தியமாக்கி இந்திய அரசை ஆட்டங்கான செய்யலாம் .

எகிப்து பல்கலைகழக பாராளுமன்றத்தின் மூலம் இதை நடைமுறைபடுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளேன் .வெற்றிபெற பியாரத்தியுங்கள் .

நான் மேற்சொன்ன விடயம் உங்கள் சிந்தனைக்கும் சரி, சாத்தியம் என்று தோன்றினால் குறிப்பாக மத்திய கிழக்கிலும் ஜரோபிய ,அமெரிக்க நாடுகளில் உள்ள இலங்கை இந்திய சகோதர்கள் அந்த நாடுகளில் உள்ள இஸ்லாமிய  மாணவர் அமைப்புகளின் உதவியுடன் அந்தத்த நாட்டு பாதுகாப்பு பிரிவிவில் அனுமதிக்கான நடைமுறைகளை மேற்கொள்வதே முதல்வெற்றியாக அமையும் .

இந்த நேரத்தில் ஒருவிடயத்தை சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன் இதை எழுதுவததற்கு முன் இஸ்லாமிய நிறுவனங்கள் , நாடுகள் ,இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு போன்றவற்றின் நிலைபாடுகள் என்ன அவர்கள் முன்னெடுக்கும் நகர்வுகள் என்ன என்பது பற்றி அறியமுற்பட்ட பொழுது கிடைத்த பதில் என்னை ஆச்சரியபடுத்திவிட்டது .

வழமைபோல கைது செய்யப்பட்டதின் பின் அல்லது இனஅழிப்பு முடிந்ததன் பின் கருத்து சொல்லவே இந்த ஓட்டுமொத்த அமைப்புகளும் காத்திருப்பதாக தெரிகிறது .

சமகாலத்தில் முஸ்லிம்களின் விடயத்தில் ஓரளவு கவனம் செலுத்தி அறிக்கைகள் மூலமாகவேனும் கண்டங்கள் தெரிவிக்கும் ஷைய்க் யூசுப் கர்ளாவியின் "இஸ்லாமிய அறிஞ்சர்களுக்கான ஒன்றியம்" ஒரு இஸ்லாமிய அறிஞ்சர் இவ்வளவு தூரம் குற்றம்சாட்டப்பட்டு மக்களெல்லாம் அதிர்ந்து போய் இருக்கும் வேளையில் ஷைய்க் ஜுசுப் கர்ளாவி இமாமா ? இல்லையா ? என்று தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் விவாதம் நடத்தி கொண்டிரிக்கிறது .

நல்லவர்களை அல்லாஹ் பாதுகாப்பான் என்பதில் மிக உறுதியான நம்பிக்கையில் இருக்கிறார்கள் என்று நினைக்கிறன். இவர்களைவிட சர்வதேச மதச்சுதந்திரதிற்காண அமெரிக்ககுழு எவ்வளோமேல்.

அல்லாஹ் நமது நல்ல முயற்சிகளை பொருந்திகொள்வானாக..

7 comments:

  1. சவுதி அரசு தலையிட்டால் இன்ஷா அல்லாஹ் சிலவேளை காரியங்கள் நடக்கலாம். முயற்சி செய்யுங்கள் அல்லாஹ் உதவி செய்வானாக

    ReplyDelete
  2. அல்லாஹ் போதுமானவன்

    ReplyDelete
  3. இவ் விடையத்தில் சவூதி அரசு தலையிடா வேண்டும்

    ReplyDelete
  4. இவ் விடையத்தில் சவூதி அரசு தலையிடா வேண்டும்

    ReplyDelete
  5. ஜாகிர் நாயக் விடயத்தை இஸ்லாத்திற்கான ஓர் மேலதிக விளம்பரமாக மாற்றியமைக்க வேண்டும்!

    ReplyDelete
  6. அல்லாஹ் தீர்ப்பு அளிப்பான் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete
  7. அல்லாஹ் தீர்ப்பு அளிப்பான் இன்ஷாஅல்லாஹ்

    ReplyDelete

Powered by Blogger.