Header Ads



அன்புள்ள சம்பந்தன் ஐயா அவர்களுக்கு, ஒரு முஸ்லிம் சகோதரர் எழுதுவது..!

இணைந்த வடக்குகிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் ஒருவரை ஏற்றுக்கொள்ளத்தயார் என்று ஜப்னா முஸ்லிம் இணையத்தளம் மூலமாக நீங்கள் சொன்னதை அறியக்கிடைத்து மிகவும் ஆச்சரியம் அடைந்தேன். அதிலும் பக்குவமுள்ள படித்த ஒரு முஸ்லிம் நபரை ஏற்றுக்கொள்ள தயார் என்று நீங்கள் சொல்லிஇருந்தீர்கள். “பக்குவமுள்ள” என்பதன் அர்த்தம் என்ன?

ஐய்யா அவர்களே! 

இன்றுவரை கிழக்கிலே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு விகிதாசார அடிப்படையில்கூட இன்னும் காணிகள் வழங்கப்படவில்லை. சம விகிதத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் 25%க்கும் குறைவான நிலத்தினையே கொண்டிருக்கிறார்கள். வடக்குகிழக்கு இணைவதற்கு முதல் உங்களால் சமவிகிதத்தில் காணிகளை வழங்கமுடியுமா? 

புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர்களுடைய இடத்தில் இருப்பதற்கு சந்தர்ப்பத்தை ஏட்படுத்திகுடுக்க முடியுமா? 

சுனாமியின்பின் முஸ்லிம்களின் காணிகளில் பலாத்காரமாக குடியமர்த்தப்பட்ட உங்கள் தமிழர்களை உங்களால் எழுப்பமுடியுமா? 

முஸ்லிம்களின் மையாவாடிகள் ஆயுதமுனையில் பிரித்தேடுக்கப்பட்டதே அதனை உங்களால் திரும்பித்தரமுடியுமா? 

வடகிழக்கு இணைந்திருந்தபோதே புலிகளாலும் மற்றைய ஆயுதக்குழுக்களாலும் முஸ்லிம்களுக்கு செய்யப்பட்ட அநியாயங்கள் ஏராளம். அதை கண்டும் காணாததுபோல் இருந்த நீங்கள் இப்பொழுது முதலைக்கண்ணீர் வடிக்கிறீர்கள். தமிழ்பேசும் மக்கள் என்கிறீர்கள். புலிகளால் விரட்டியடிக்கப்பட்டபோதும் நாங்கள் தமிழ்பேசும் மக்கள்தான். 

முஸ்லிம்கள் வடக்குகிழக்கு இணைவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள் ஏன் மட்டக்களப்பில் வாழ்கின்ற தமிழ் சகோதரர்களும்கூட  விரும்பமாட்டார்கள் காரணம் உங்களுக்கும் தெரியும் அவர்களுக்கும் தெரியும். 

வடக்கிலே புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களை மீளக்குடியமர்த்த இப்பொழுதும் நீங்கள் தடையாகவே இருக்குறீர்கள். அரசாங்க காணிகளிலே அவர்களை குடியமர்த்தும்போது நீங்கள் அல்லது உங்களை சார்ந்தவர்கள் தடையாக இருக்கிறீர்கள். நீங்களா வடக்குகிழக்கு இணைந்ததும் முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் ஒன்றிணைத்து வாழ்வீர்கள்?

உங்கள் அரசியல் இலாபத்துக்காக முஸ்லிம் தமிழ் உறவை குலைக்காதீர்கள். 

ஏன் உங்களால் தனியான வடக்கிலே ஒரு முதலமைச்சறோடு ஆளமுடியாது? வடக்கும் கிழக்கும் ஏன் இணையவேண்டுமென்று எதிர்பார்கிறீர்கள். இப்பொழுது உங்கள் கட்சி பிரிவினைக்குட்பட்டுவிட்டது அதனை சரிசெய்ய இவ்வாறான கபட நாடகம் ஆட நினைக்கிறீர்கள்.

முஸ்லிம்களும் தமிழர்களும் கிழக்குமாகாணத்திலே சகோதர சமூகமாகவே வாழவிரும்புகிறோம். உங்களால் முடிந்தால் வடக்கிலே வாழுங்கள். புலிகளால் விரட்டியடிக்கபட்ட மக்களுக்கு காணிகளை வழங்குங்கள். எங்கள் மாகாணத்தை நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

முஹம்மத் தௌபீக்
பாலமுனை, ஆரயம்பதி
12.07.2016

3 comments:

  1. ApudI paaraththalum kelakkielum tamilar khal thaan kuduthalaka erukkurarrlal msr thawffek avarlalee

    ReplyDelete
  2. Mr.vr methusan methu அவர்களே, கிழக்கிலும் தமிழர்கள்தான் அதிகம் என்றால் இரண்டு மாகாணத்தையுமே நீங்களே தனித்தனியாக ஆளுங்கள்.

    ReplyDelete

Powered by Blogger.