அடுத்தது யார், கைது செய்யப்படபோகிறார்..?
(எம்.ஆர்.எம்.வஸீம்)
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்படாமல் இருப்பதாக மக்கள் தெரிவித்துவந்தனர். அத்தடன் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்களும் ஊடகங்களுக்க முன் வந்து முடிந்தால் கைதுசெய்யுங்கள் என்று அரசாங்கத்துக்கு சவால்விட்டு செல்கின்றனர். என்றாலும் அரசாங்கம் சட்டத்தின் அடிப்படையிலேயே எதையும் மேற்கொள்ளும். அதன் அடிப்படையிலேயே தனியார் நிறுவனத்துடன் கொடுக்கல் வாங்களின்போது இடம்பெற்ற நிதிமோசடி தொடர்பில் நாமல் ராஜபக்ஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார் என என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன ராஜகருணா தெரிவித்தார்.
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இருப்பவர்களே இன்று அடுத்தது யார் கைதுசெய்யப்படப்போகின்றார் என்பது தொடர்பாக தெரிவித்து வருகின்றனர். தாங்கள் செய்த குற்றத்தில் இருந்து தப்பிக்க முடியாது என்பது அவர்களுக்கே தெரியும்.
எனவே வற்வரி தொடர்பில் உயர்நீதிமன்றின் உத்தரவை மதிக்கின்றோம். அத்துடன் வற் வரி தொடர்பில் பாராளுமன்றத்தில் கடந்த 8ஆம் திகதி முதல்கட்ட வாசிப்பு இடம்பெற்றுள்ளது. இரண்டாம் கட்டவாசிப்பு எதிர்வரும் 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. அதன்பிறகு எதிர்வரும் மே மாதம்முதல் மாற்றங்களுடன் வற்வரி நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வற் வரி அதிகரிப்பானது ராஜபக்ஷ் அரசாங்கத்தின் கடனை அடைப்பதற்காக விருப்பம் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்டதொன்றாகும். குறுகிய காலத்திற்கே இது அமுல்படுத்தப்படும்.
அத்துடன் நல்லாட்சியில் நீதிமன்றத்தின் சுயாதீனத்தன்மை பாதுகாக்கப்பட்டுள்ளமை உறுதியாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
NO WHITE VAN AREST BE HAPPY UR ALIVE
ReplyDeleteகைது செய்யப்படுவதும் விசாரணை செய்யப்
ReplyDeleteபடுவதும் பின்னர் விடுதலை செய்யப்படுவதும்
நமது நாட்டின் சட்ட நடைமுறையாகக இருக்கக் கூடாது!